ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தேசியப் பட்டியல் உறுப்புரிமை ஹசனலி நியமனம்
ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தேசியப் பட்டியல் உறுப்புரிமையைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் நாடாளுமன்ற தேசியப் பட்டியல் உறுப்பினராக
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நாயகம் ஹஸன் அலி
நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னுமொரு தேசியப்பட்டியல் உறுப்புரிமையை
பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. கொழும்பு மாவட்டத்தில்
போட்டியிட்ட சபீக் ரஜாப்தீன் அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
பிரதிச் செயலாளர் நிஷாம் காரியப்பர் இதற்கு நியமிக்கப்படலாம்.
இதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் தேசியப் பட்டியல் உறுப்புரிமை
கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கு ஜனநாயக மக்கள் முன்னணித்
தலைவர் மனோ கணேசன் அல்லது அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர்
என்.குமரகுருபரன் நியமிக்கப்படலாம்.
Comments
Post a Comment