ரவி கருணாநாயக்க எதிர்கட்சி தலைவரா?
எதிர்கட்சித்
தலைவராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சி
வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியினுள்
தலைமைக்கு எதிரானதோர் பனிப்போர் தோன்றியுள்ள நிலையில்
இத்தகவல் கசிந்துள்ளது. அத்துடன் மிகவும் அரசியல் அனுபவமிக்க ஜோசப்
மைக்கல் பெரேரா வை எதிர்கட்சித் தலைவராக நியமிக்க
முன்மொழியப்பட்டிருந்தபோதிலும் அவர் அப்பதவியை நிராகரித்துள்ளதாக
தெரியவருகின்றது.
இவ்நியமனம் தொடர்பாக கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள விடுதியில் ஒன்றில் ஒன்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அனைத்துஉயர் மட்ட உறுப்பினர்களுடனும் கொன்பிரஸ்கோல் () ஊடாக பேசிய பின்னர் இவ்முடிவு எட்டப்பட்டுள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பட்டியலில் 8 வது இடத்தில் ரவி கருணாநாயக்க உள்ள தருணத்தில் அவர் எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியினுள் பலதரப்பட்ட சிக்கல் உருவாகியுள்ளமை உணரக் கூடியதாகவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருக்கு எதிராக பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ளமை மறைக்க முடியாத உண்மை.
மறுபுறத்தில் கட்சியின் பிரதித் தலைவர்களாக முன்னாள் ஜனாதிபதி சஜித் பிறேமதாஸ மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளதுடன் அவர்கள் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் நுழைய முனைவதையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது.

Comments
Post a Comment