தமிழ் தேசிய கூட்டமைப்பு-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் நேற்றிரவு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தாம் இணங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
சிறுபான்மையின மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஒன்றாக இணைந்து செயற்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் ரவூப் ஹகீம் குறிப்பிட்டார்.

Comments
Post a Comment