பதவிகளுக்காக மு.கா. சோரம் போகாது;தேசியபட்டியலில் இரு இடங்களை ஐ.தே.க.வழங்கியாக வேண்டும்:ஹக்கீம் _
ஜனாதிபதியோ, ஆளும்தரப்பினரோ அரசாங்கத்தில் எம்மை இணைந்து கொள்ளுமாறு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இந்த நிலையில் எமது கட்சியை அரசுடன் சேருமாறு அழைக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தியின் பின்னணியில் ஒரு சதிமுயற்சி இருப்பதாக நான் கருதுகிறேன்.
கண்டி மாவட்டத்தில் மீள்வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், அந்த மாவட்ட மக்கள் மத்தியில் எனது செல்வாக்கை இல்லாமல் செய்து என்னைப் பின்னடையச் செய்வதற்கு அல்லது தோல்வியடைய வைப்பதற்கானதொரு சூழ்ச்சியாகவே இதனைக் கருதுகிறேன்.
அத்துடன் பதிவிகளுக்காக எமது கட்சி ஒருபோதும் சோரம் போகவும்மாட்டாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கல்முனை நியூஸ் இணையதளத்துக்கு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், எம்மை ஏளனப்படுத்தவும், மலினப்படுத் தவுமே இவ்வாறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக எமக்குக் கிடைக்கக் கூடிய இரண்டு தேசியல் பட்டியல் எம்.பிக்களை இல்லாமல் செய்து ஐக்கிய தேசியக் கட்சியை எம்முடன் முரண்பட வைக்கும் சதியும் இந்த விவகாரத்தில் அடங்கியுள்ளது.
Comments
Post a Comment