தமிழ் கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்த மு.கா. தயார் : செயலாளர்நாயகம் ஹசன் அலி தெரிவிப்பு

தேசிய பிரச்சினை தீர்வு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன்தொடர்ந்து பேச்சுக்களை நடத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவேஇருக்கின்றது என்று அதன் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்த தயார் என்று ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ளதகவல்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே ஹசன் அலி மேற்கண்டவாறுகுறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
"வடக்கு கிழக்கு விடயம் தொடர்பில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ளும் நோக்கம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர்ந்துபேச்சுக்களை நடத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவே இருக்கின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஒருஇணக்கப்பாட்டுக்கு வந்தால்தான் தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில்இரண்டு சமூகங்களும் திருப்தியடைக்கூடிய ஒரு பொதுவான முடிவுக்கு வரமுடியும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் இந்த விடயத்தையேவலியுறுத்துகின்றன. முஸ்லிம் மக்கள் மத்தியில் முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்மக்கள் மத்தியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சிங்கள மக்கள் மத்தியில்அரசாங்கமும் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்டுள்ளன.
எனவே தேசிய பிரச்சினை தீர்வு விடயத்தில் இதய சுத்தியுடன் செயற்பட்டால்தான்ஒரு நிரந்தர தீர்வைப் பெற்று இலங்கையை ஒரு சுபீட்சமான நாடாக மாற்றமுடியும் என்பது எமது நம்பிக்கையாகும்.
தேர்தலுக்கு முன்னரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பேச்சுக்களை நடத்தி வந்துள்ளது. அதன்படி எதிர்காலத்திலும்தொடர்ந்து அவர்களுடன் பேச்சு நடத்தத் தயார் என்பதனைக் குறிப்பிடுகின்றோம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்துபொதுவான இணக்கப்பாட்டுக்கு வந்து ஒரு வேலைத்திட்டத்தை தயாரித்துஅரசாங்கத்துடன் பேச்சு நடத்தினால் அதற்கு பலம் அதிகமாகும். _

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்