ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் கொழும்பில் இன்று சந்திப்பு
இக் கூட்டத்தில் வெற்றிடமாகவுள்ள கல்முனை மாநகரசபையின் மேயர் பதவி மற்றும் கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தமாகவும் முடிவெடுக்கவிருப்பதாகவும் ஹஸன் அலி கூறினார்.
கல்முனை மாநகரசபையின் மேயராக பதவி வகித்த எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கிழக்குமாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த பஷீர் சேகுதாவூத் ஆகிய இருவரும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற நியமனம் சம்பந்தமாகவும் ஆராயப்படவிருக்கிறது என கல்முனை நியூஸ் இணையதளத்திற்கு தெரியவந்துள்ளது.
Comments
Post a Comment