கல்முனை மாநகரசபையின் முதல்வராக மஷூர் மௌலானா நியமனம்



EXCLUSIVE கல்முனைமாநகர முதல்வராக பிரதி மேயர் மஷூர் மௌலானா நியமிக்கப்படவுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி கல்முனை நியூஸ் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற கட்சியின் அரசியல் உயர்பீடக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தேர்தலில் கல்முனை மாநகர மேயர் எச்.எம்.ஹரீஸ்வெற்றிபெற்றதைத்தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு மஷூர் மௌலானாநியமிக்கப்படவுள்ளார்.

பிரதி மேயராக கல்முனை மாநகர சபை உறுப்பினர் பஷீர் நியமிக்கப்படவுள்ளார் என்றும் ஹசனலி மேலும் தெரிவித்தார்.

முன்னாள் செனட்டரும்,மூத்த அரசியல்வாதியுமான மஷூர் மௌலானா ஐக்கிய தேசியக்கட்சியின் நீண்ட கால உறுப்பினராகவும் திகழ்ந்தார்.

ஸ்தாபகத்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் காலகட்டத்தில் இவர் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டார்.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்