கல்முனை மாநகர மேயர் யார்??




கல்முனை மாநகர மேயராக இருந்த எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செயப்பட்டுள்ள நிலையில் மாநகர முதல்வர் வெற்றிடத்துக்கு பிரதி முதல்வராக தற் போது பதவி வகிக்கும் மசூர் மவ்லானாவா முதல்வர் ? அல்லது உறுப்பினராக பதவி வகிக்கும் சட்டத்தரணி ரக்கீபா ? என்பதில் சிக்கல் நிலை உள்ளது.
தேர்தல் பிரசாரங்களின் போது மாநகர முதல்வர் ஹரீஸ் சட்டத்தரணி ரக்கீபைதான் நியமிப்பதென ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார். இதே வேளை முதல்வர் இல்லாத போதும் , பதவி விலகுகின்ற போதும் நான்தான் முதல்வராவேன் என சட்டப்புத்தகத்தை விரிக்கின்றார் .
இதே வேளை பிரதி முதல்வர் பதவி நட்பிட்டிமுனைக்கு வழங்கப்படவுள்ளதாகவும்
அதனை சாய்ந்தமருதுக்கு தர வேண்டுமென கூறுவதாகவும் பேசப்படுகின்றது. மாநகர சபை பதவி சிக்கலுக்கு இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் உயர் கூட்டம் தீர்வு காணுமா ?

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்