Posts

மாகாண ஆளுநர்களின் வருடாந்த மாநாடு நவ.29ஆம் திகதி!

Image
மாகாண ஆளுநர்களின் வருடாந்த மாநாடு இம்மாதம் 29ஆம் முற்பகல் 8.30மணிக்கு கதிர்காமம் மந்தாரா ரொஷேன் ஹோட்டலில் நடைபெறும். கடந்த ஆண்டு சப்ரகமுவை மாகாண ஆளுநர் வீ.ஜே.மு.லொக்குபண்டார இந்த மாநாட்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவர் இம்முறை அந்த தலைமை பதவியை ஊவா மாகாண முதலமைச்சர் நந்தா மெத்யூவுக்கு வழங்கவுள்ளார். இதன்படி ஊவா மாகாண முதலமைச்சர் நந்தா மெத்யூ தலைமையில் நடைபெறும் இந்த 17ஆவது வருடாந்த மாநாட்டில், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ,மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, கிழக்கு மாகாண ஆளுநர் வைஸ் அத்மிரல் மொஹான் விஜேவிக்கிரம, வட மத்திய மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுல்கனே, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ,தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ பலல்ல ,சப்ரகமுவை மாகாண ஆளுநர் வீ.ஜே.மு.லொக்குபண்டார மற்றும் மாகாண சபைகளின் செயலாளர்கள் ஆகியோரும் கலந்துக் கொள்வர்.

நீல சேட் அணிந்தால் மகிந்தவுக்கு ஆதரவா ? முட்டாள் தனமான அரசியல் சிந்தனை

Image
ஏழைகளின் தோழனாக விளங்கும்  கிழக்கு மாகாண  சபை உறுப்பினர்  பேராசிரியர்  எம்.ராஜேஸ்வரன்  என்றும்  உதவிக்கரம் நீட்டுபவர் . ஏழைகளை அரவணைப்பவர் , நாள் தவறாது ஆலயம் சென்று வழி  படுபவர் . வருடம் தோறும் தனது பிறந்த நாளை  வறியவர்கள் , வலது குறைந்தோர் ,அனாதைகளுடன்  இணைந்து  எதையாவது அவர்களுக்கு கொடுத்து விட்டு அன்றைய பொழுதை அவர்களுடனேயே கழிப்பவர் .  அவ்வாறான ஒருவரை அரசியல் நாகரிகமற்றவர்கள்  கேவலப் படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் . தனது பிறந்த தினமான 18.11.2014 அன்று  இந்த நாட்டின் ஜனாதிபதியின்  பிறந்த நாளுமாகும்  அதற்காக  அவர் நீல சேட்  அணிவதும்  ஏழைகளுக்கும் ஆலயங்களுக்கும் உதவுவதும்  குற்றமாகுமா . அவரது அரசியல் வளர்ச்சியை பொறுக்க முடியாத  போக்கணம் கெட்ட  அரசியல் வாதிகளே  ஜனாதிபதியின் பிறந்த தினத்துடன் இவரையும் சேர்த்து முடிச்சிப் போட்டு மக்கள் மத்தியில் அவப் பெயரை உண்டு பண்ணுகின்றனர். இவரின் கொடை வள்ளல் தனத்தை  இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகளினால்  தடுத்து வி...

கல்முனை வலயக் கல்வி அலுவலக நிருவாக அதிகாரியாக பரஞ்சோதி சுந்தரி நியமனம்

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய நிருவாக உத்தியோகத்தராக திருமதி பரஞ்சோதி சுந்தரி  நியமனம் செய்யப் பட்டுள்ளார் .  சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்திய சாலையில் நிருவாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இவர்  கல்முனை  வலயக்கல்வி அலுவலகத்தில் ஏற்பட்ட நிருவாக உத்தியோகத்தர் வெற்றிடத்துக்கு கிழக்கு மாகாண  கல்வி திணைக்களத்தினால் நியமிக்கப் பட்டுள்ளார் . கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில்  நிருவாக உத்தியோகத்தராக கடமையாற்றிய ஏ.எல். ஜுனைதீன்  ஓய்வு பெற்று சென்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே  இவர் நியமிக்கப் பட்டுள்ளார் . இன்று வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையை பொறுப் பேற்ற  புதிய நிருவாக உத்தியோகத்தரை  வரவேற்கும் நிகழ்வு  கல்முனை வலயக் கல்வி அலுவலக நலன்புரிச் சங்க தலைவர் யு.எம்.இஸ்ஹாக்  தலைமையில் இடம் பெற்ற போது  வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ,பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான ஏ.சி.எம்.தௌபீக்,எஸ்.எல்.அப்துல் ரஹீம் .வீ.மயில் வாகனம்  உட்பட உத்தியோகத்தர்கள் பாராட்டி உரையாற்றினர்.  ...

க.பொ.சாதரணதரம் 2014 பரீட்சை டிசம்பர் 9இல் ஆரம்பம்

Image
க.பொ.சாதரணதரம் 2014 பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. டிசம்பர் மாதம் 3ஆம் திகதியுடன் நள்ளிரவு 12.00 தொடக்கம் பரீட்சை நிறைவுறும் வரை பரீட்சார்த்திகளுக்கான பொது வகுப்புக்கள் நடத்துதல்- கருத்தரங்குகள் நடத்துதல் மாதிரிப் பரீட்சை வினாக்கள் அச்சிடுதல் - விநியோகித்தல்- சுவரொட்டிகள்- பதாகைகள் மற்றும் இலத்திரனியல்- அச்சு ஊடகங்களினூடாக பிரபலப்படுத்துதல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு தனிநபர்- நிறுவனத்தினால் இதற்கெதிராக செயற்படுவோர் இருப்பின் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையம் அல்லது பொலிஸ் தலைமையகத்திற்கு கீழ்வழங்கப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்களினூடாக தொடர்புகொண்டு முறைபாடு செய்யுமாறு பரீட்சை திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பாடசாலை பரீட்சை ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறு கிளை - 0112784208 / 112784537 உடனடி இலக்கம் (ப.தி)- 19111 பொலிஸ் தலைமையகம்- 0112421111 அவசர இலக்கம் 119

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு இன்று 42வது பிறந்த நாள்

Image

அமைச்சர் ரிசாத்தின் தீர்மானம் சனிக்கிழமை எடுக்கப்படும்

Image
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் (முஸ்லிம்) காங்கிரஸ் எதிர்வரும் சனிக்கிழமையன்று தீர்மானிக்கவுள்ளது. கட்சியின் உயர்பீடக்குழு இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளது. ஏற்கனவே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கிழக்கு மாகாண சபையின் மூன்று உறுப்பினர்கள் நேற்று சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்தனர். கடந்த திங்கட்கிழமை கட்சியின் உயர்பீடம் எடுத்த முடிவுக்கு அமையவே இந்த விலகல் இடம்பெற்றது. அதேநேரம் நேற்று  வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கும் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொண்டார். இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேனவுக்கா. மஹிந்தவுக்கா? தமது ஆதரவு என்பது தொடர்பில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியூதீன் தலைமையில் கட்சியின் உயர்பீடம் ஹபரணையில் கூடி முடிவெடுக்கவுள்ளது.

சமூகமட்டவிபத்துக்கள் குறைப்புதொடர்பானசெயற்திட்டத்தின் அறிமுகக் கலந்துரையாடல்

Image
சுரேஸ் யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியில் சர்வோதயம் அமைப்பு அமுல் படுத்தும் இவ்வருடத்திற்குரிய செயற்திட்டத்தின் சமூகமட்டவிபத்துக்களைகுறைத்தல் எனும் கருத்திட்டத்தின் அதன் ஒரு பகுதியா கவவுணதீவூ பிரதேசத்திற்குட்பட்ட பிரிவிற்கான கலந்துரையாடல் வவூணதீவூ பிரதேசசெயலனத்தின்  உதவி பிரதேசசெயலாளரர்  எஸ். ராஜ்பாபு தலைமையில் நேற்று  26 பிரதேச செயலகத்தின் கேட் போர்  கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் சமூகமட்டவிபத்துக்களில் இலகுவில் பாதிப்புக்குள்ளாகும் சிறுவர் பெண்களுக்கான விழிப்புணர்வுகள் மற்றும் திட்டத்தின் அறிமுகம் யானைத் தாக்குதல்,கிருமிநாசினிகள் கையாழ்தலின் பாதிப்பு,பாலுட்டும் தாய்மார்களின் கவலையி ன்மைபோன்றவிடயங்கள் தொடர்பான  கிராமசேவகர்  பிரிவுகளில் விழிப்புணர் வூட்டப்படவேண்டும் எனதீர் மானிக்கப்பட்டது. இதன் போது சர்வோதய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர்  எஸ்.மதனகுமார்  திட்டம் தொடர்பாக அறிமுகப்படுத்தியதுடன் வவுணதீவூபொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.டி நசீர் பிரதேசசெயலகத்தின் சிறுவர் உரிமை மேம்பாட...

மருதமுனை SLTJ யின் கௌரவிப்பு விழா

Image
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை ஏற்பாடு செய்துள்ள  தரம் 5 புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா வெள்ளிக்கிழமை  மருதமுனையில் நடை பெறவுள்ளது . எம்.ஐ.முகம்மத் பிராஸ் தலைமையில் மருதமுனை கலாச்சார  மண்டபத்தில் நடை பெறவுள்ள இவ்விழாவில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகவும் , பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான ஏ.சி.எம்.தௌபீக் ,எஸ்.எல்.ஏ.ரஹீம், பீ.எம்.வை அரபாத், உதவிக் கல்விப் பணிப்பாளர்  ஏ.எல்.சக்காப்  ஆகியோர் விசேட அதிதிகளாகவும் ,மற்றும் அதிபர்களும் , முக்கிய பல பிரமுகர்களும்  கலந்து சிறப்பிக்கவுள்ளனர் .  

பெண்கள் வாழ்வின் பல நொண்டிச் சாட்டுகளின் மூலமாக நலிவடைந்து போகின்றனர்

Image
தற்போது உள்ள பெண்கள் தொழில் முயற்சிகள் எதுவும் இல்லாது பல நொண்டிச்சாட்டுகளினால் நலிவடைந்து போகின்றனர் அதனால்தான் ஆண்களில் தங்கிவாழ்கின்ற சூழ்நிலைகள் காணப்படுகின்றது என தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் எஸ்.ஏ.எம்.சலீம் மௌலானா கருத்துத்து தெரிவிக்கின்றார். இன்று 25.11.2014 மட்டக்களப்பு வாலிப கிறிஸ்தவ சங்கம் ஏற்பாடு செய்திருந்த திட்டம் செயற்படுத்தும் 25 பிரதேசத்தின் இளம் பெண்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் பயிற்சி நிலையத்துடன் இணைத்துக் கொள்ளும் ஆலோசனைக் கருத்தரங்கின் போது கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.. அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்...... தற்போது உள்ள பெண்கள் சமூதாயம் ஆண்களில் தங்கி வாழ்கின்ற சூழ்நிலைகள் பல காணப் படுகின்றது தங்கி வாழ்கின்ற மனப்பாங்கு இருப்பின் வாழ்க்கையை முன்னேற முடியாது அதில் சரியான காரணம் பெண்கள் எதுவித தொழில் முயற்சிகளும் இன்றி வாழ்கின்றனர். ஆனால் அதற்கு சில நிறுவனங்களினால் சந்தர்ப்பங்கள் வழங்கினாலும் நொண்டிச் சாட்டுகளினால் நலிவடைந்து போகின்றனர் பெண்கள் பலமாக்கிக் கொ...

கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் விடுதலை

Image
கல்முனை மாநகர  சபையில் நேற்று ஏற்பட்ட குழப்பம் காரணமாக அம்பாறை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற  நிலையில்  வைத்திய சாலையில்  வைத்து கல்முனை பொலிசாரால் கைது செய்யப் பட்ட கல்முனை மாநகர சபை  உறுப்பினர் ஏ.எம்.றியாஸ்  இன்று  நீதி மன்றால்  விடுதலை செய்யப் பட்டுள்ளார் .  ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப் பட்டதாக  பொலிஸ்  தகவல் தெரிவிக்கின்றன . இதே வேளை  இன்று காலை  கைது செய்யப் பட்ட  மற்றுமொரு  மாநகர சபை உறுப்பினரான ஏ.நிசார்தீன்  கல்முனை நீதி மன்றால் 75 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப் பட்டுள்ளார் . நேற்று கல்முனை மாநகர சபையில்  இடம் பெற்ற சம்பவத்தில் காயமடைந்த  மாநகர சபை உறுப்பினர்  பிர்தௌஸ் தொடர்ந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் . 

கல்வி மேம்பாடுக்கான உதவி வழங்குதல்

Image
எஸ்.ரி. ஏ சொலிடரிட்டி பவுண்டேசன் அமைப்பினால்  கிளிநொச்சி, முல்லைத்தீவு எல்லைக்கிராம உறவுகளை இழந்த, அங்கவீனமுற்ற குடும்பங்களைச் சேர்ந்த 30 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கிளி/ குமாரசாமிபுரம் அ.த .க பாடசாலையில் மாற்று திறனாளிகள் செயற்கை உறுப்பு அமைப்பின்  இணைப்பாளர் அ.அன்ரனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு முல்லைத்தீவு மாவட்ட உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. த.மைக்கல்தியாகராஜா, விஸ்வமடு திருச்சபை பங்குத்தந்தை வண. அசோக்   எஸ்.ரி. ஏ சொலிடரிட்டி பவுண்டேசன் அமைப்பின் செயலாளர் திரு. வே. வாமதேவன் ,புன்னைனீராவி கிராம சேவகர் கோ. சேகர் மற்றும் பெற்றோர்களும் பிள்ளைகளும் கலந்து கொண்டனர்.  இதன் போது பிள்ளைகளுக்கு வேண்டிய கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கிவைக்கப்பட்டது.  எஸ்.ரி. ஏ சொலிடரிட்டி பவுண்டேசன் அமைப்பினால் ஏற்கனவே கிளிநொச்சியில் உள்ள தந்தையை இழந்த 20 பிள்ளைகளுக்கு ஒரு வருடமாக கல்வி மேம்பாட்டுக்கு மாதாந்தம் 3000/- வழங்கப்பட்டு வருகின்றமையும்,  கிளி/மயில்வாகனபுரம்   அ.த .க பாடசாலை மாணவர்களுக்கும் கற்ற...

கல்முனை மாநகர சபையில் குழப்பம் கைகலப்பு

Image
கல்முனை மாநகர சபையில் குழப்பம் கைகலப்பு சம்பவம் இன்று இடம் பெற்றது. கல்முனை மாநகர சபை அமர்வு இன்று மாநகர முதல்வர் சட்ட முதுமாணி நிசாம் காரியப்பர் தலைமையில் இடம் பெற்றது. எதிர் அணி உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் பிரேரணை யொன்றை  சபைக்கு  கொண்டு வந்த போது  ஏற்பட்ட  வாக்குவாதத்தை தொடர்ந்தே உறுப்பினர்களுக்கிடையில்  வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது . இதனால்  ஆளும் தரப்பு உறுப்பினர் பிர்தௌஸ்  தலையில் காயம் அடைந்து கல்முனை அஸ்ரப் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் .இந்தஇக்கட்டான நிலைமையை அடுத்து முதல்வரினால் சபை அமர்வு ஒத்திவைக்கப் பட்டது . சம்பவம் தொடர்பாக கல்முனை மாநகர முதல்வர்  நிசாம் காரியப்பரினால்  கல்முனை பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து நாளை மாநகர சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு  ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்யவுள்ளதாக  முதல்வர் செயலகத்தில் இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் முதல்வர் தெரிவித்தார்

பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சிநெறி அரசடித்தீவு சக்தி மகளீர் இல்லத்தில்ஆரம்பம்

Image
சுரேஸ் தற்காலத்தில் பெண்களின் அழகுக்கலை தொழில் என்பது மிகவும் பாரிய வருமானம்மிக்க ஓர் சுயதொழிலாக அமைந்து வருகின்றது அந்தவகையில் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் வாழும் பெரும்பாலான இளம் பெண்கள் தொழில்வாய்ப்புக்கள் இல்லாமல் வீட்டுப் பணிப்பெண்களாக வெளி நாடு சென்று பெரிதும் கஸ்டங்களுக்குள் ஆளாகின்றனர் அவ்வாறான பெண்களது சுய தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ் நாட்டு நிதியுதவியில் மட்டக்களப்பு ஸ்டாசொலிடார்டி பவுண்டேசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அரசடித்தீவு சக்திமகளீர் இல்லத்தில் பெண்களுக்கான மூன்று மாதகால அழகுக் கலைபயிற்சி நெறி அமைப்பின் மாவட்ட பணிப்பாளர் வ.கமலதாஸ் தலைமையில் ஆரம்பநிகழ்வு இன்று (25) நடைபெற்றது. இப்பயிற்சி நெறியினை  ஆரம்பித்து வைக்கும் வகையில் சுவிஸ் நாட்டு ஸ்டாசொலிடார்டி அமைப்பின் பணிப்பாளர் எஸ்.ஆதிரியன் மற்றும் அவரது பாரியார் அத்துடன் அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின்அதிபர் ரீ.தியாகராஜா, அழகுக்கலை பயிற்றுனர் வி.சித்ரா ஸ்டாஅமைப்பின்உத்தியோகத்தர்எஸ்.ரஞ்சித்வீ.வாமதேவன்,ஆர்.பிரபாகினிஆகியோர்கலந்துகொண்டுபயிற்சி...

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அநுர பியதர்ஷன யாபா கடமைகளை பொறுப் பேற்றுக் கொண்டார்.

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சட்டத்தரணி அநுர பியதர்ஷன யாபா தனது கடமைகளை சுப வேளையில் பொறுப் பேற்றுக் கொண்டார்.  ஸ்ரீ  .லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் மற்றும் அமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்களின் உற்சாகமான வர வேரவேற்பிக்கு மத்தியில் அவர் அங்கு வரவேற்கப்பட்டார்.இந்நிகழ்வில் அமைச்சர்களான பியசேன கமகே மற்றும் சிரேஷ்ட அமைச்சர் சீ.பி ரட்னாயக உட்பட பலர் கலந்து கொண்டனர். தொழில் ரிதியாக சட்டத்தரணியான இவர் 1994 ஆம் ஆண்டு நடை பெற்ற பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.தற்பொழுது பெற்றோளிய வளத்துறை அமைச்சராக செயற்பட்டு வரும் இவர் கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவராவார். 1959 ஆம் ஆண்டு இவர் பிறந்தார் சட்டத்தரணி அநுர பியதர்ஷன யாபா ஸ்ரீ .லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சரும்  ஸ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ஷ் கட்சியின் பொருள...

திகாமடுல்ல மாவட்டத்தில் 4 இலட்சத்து 65 ஆயிரத்து 757 பேர் வாக்களிக்கத் தகுதி

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் 4 இலட்சத்து 65 ஆயிரத்து 757 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் திலின விக்ரமரட்ன தெரிவித்தார். இதன்படி அம்பாறை தேர்தல் தொகுதியில் 161,999 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியல் 80,357 பேரும் கல்முனைத் தேர்தல் தொகுதியில் 71,254 பேரும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 152,147 பேரும் இவ்வாறு வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர். இதே வேளை, வாக்களிப்பதற்கென 464 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஹரீஸ் எம்.பியின் முறையீட்டால் மெட்ரோ மிரா் இணையத்தள செய்தி ஆசிரியா் பதவி நீக்கம்!

Image
மெட்ரோ மிரர் இணையத்தளத்தில் வெளியான பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்பான பிழையான செய்திக்கு விளக்கமளிக்குமாறு கல்முனை மேயர் நிசாம் காரியப்பருக்கும், அவரது ஊடக இணைப்பாளர் அஸ்லம் மௌலானவுக்கும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் கடந்த பல தடவைகள் மெட்ரோ மிரர் எனும் இணையத்தளம் தனக்கு எதிராக பிழையான செய்திகளை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றும் ஒரு செய்தியை வெளியிட்டு எனது அரசியல் சமூக பயணத்திற்கு பங்கம் விளைவிக்க முற்பட்டுள்ளனர். இந்த இணையத்தளத்தின் ஆசிரியராக கடமையாற்றுகின்ற அஸ்லம் மௌலானா, கல்முனை மாநகர சபையின் மேயர் சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் ஊடக இணைப்பாளராவார். எனவே, எனக்கெதிரான பிழையான செய்தி தொடர்பில் விசாரணை  நடத்துமாறு ஹரீஸ் எம்.பி கேட்டுள்ளார். ஹரீஸ் எம்.பி.யின் முறையீட்டை ஏற்றுக்...

2015-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்!

Image
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் 2015ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக 95 வாக்குகளால் சற்று முன்னர் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 24-ம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2015-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்திருந்தார். மறுநாள் முதல் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்று வந்ததுடன் நவம்பர் மாதம் முதலாம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது நூறு மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடத்தப்பட்டது. இதன்போது வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 152 வாக்குகளும், எதிராக 57 வாக்குகளும் பெறப்பட்ட நிலையில் வரவு செலவுத்திட்டம் 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி என்பன எதிராக வாக்களித்திருந்தன.

முடிவுகளின்றிக் கலைந்தது முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டம்

Image
கொழும்பில் நேற்று  நடைபெற்ற முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் முடிவுகளின்றிக் கலைந்து போயுள்ளது. கொழும்பு பம்பலப்பிட்டியில் நடைபெற்ற இந்த உயர்பீடக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். சுமார் இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த உயர்பீடக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று இறுதி முடிவை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்னொரு தடவை மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்புக்கு அழைத்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன் பின்னரே முஸ்லிம் காங்கிரசின் அரசியல் அதியுயர்பீடம் கூடி ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று இறுதி முடிவை எடுக்கும் என்றும் குறித்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது. எனினும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் இந்த முடிவு கட்சி தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரீஸ் MP தொடர்பில் வெளிவந்த செய்தியில் உண்மையில்லை

Image
  ஆர்.யோகராஜன் MP திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜனிடம் கூறியதாக வெளிவந்துள்ள மைத்திரிபால இல்ல அவரின் அப்பன் வந்தாலும் மகிந்தையை ஒன்றும் செய்ய முடியாது  என்ற செய்தி தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜனிடம் கல்முனை நியூஸ் செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் எம்.பி. ஜனாதிபதி தேர்தல் சம்மந்தமாக என்னிடம் எதுவும் பேசவில்லை, நான் ஊடகங்களுக்கு எந்தவித அறிக்கையும் கொடுக்க வில்லை இது பொய்யானதொரு செய்தி என்று இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு ஆர்.யோகராஜன் எம்.பி தெரிவித்தார். கல்முனை நியூஸ் செய்திப்பிரிவு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸை தொடர்பு கொண்டு கேட்டபோது நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்த விடயம் உண்மை ஆனால்  கட்சி சம்மந்தமாக நான் எதனையும் அவரிடம் கூறவில்லை மேற் குறித்த செய்தி எனது பெயரை அம்பாரை மாவட்ட மக்களிடம் மலினப்படுத்த நினைக்கும் ஒரு ப...