ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அநுர பியதர்ஷன யாபா கடமைகளை பொறுப் பேற்றுக் கொண்டார்.

ஏ.பி.எம்.அஸ்ஹர்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சட்டத்தரணி அநுர பியதர்ஷன யாபா தனது கடமைகளை சுப வேளையில் பொறுப் பேற்றுக் கொண்டார். ஸ்ரீ .லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் மற்றும் அமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்களின் உற்சாகமான வர வேரவேற்பிக்கு மத்தியில் அவர் அங்கு வரவேற்கப்பட்டார்.இந்நிகழ்வில் அமைச்சர்களான பியசேன கமகே மற்றும் சிரேஷ்ட அமைச்சர் சீ.பி ரட்னாயக உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொழில் ரிதியாக சட்டத்தரணியான இவர் 1994 ஆம் ஆண்டு நடை பெற்ற பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.தற்பொழுது பெற்றோளிய வளத்துறை அமைச்சராக செயற்பட்டு வரும் இவர் கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவராவார். 1959 ஆம் ஆண்டு இவர் பிறந்தார் சட்டத்தரணி அநுர பியதர்ஷன யாபாஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ஷ் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும, பிரதித் தலைவரும் அமைச்சருமான நிமல் சிறீபால டீ.சில்வா,சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்,எம்.பௌசி உட்பட அமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்