அமைச்சர் ரிசாத்தின் தீர்மானம் சனிக்கிழமை எடுக்கப்படும்
கட்சியின் உயர்பீடக்குழு இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளது.
ஏற்கனவே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கிழக்கு மாகாண சபையின் மூன்று உறுப்பினர்கள் நேற்று சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்தனர்.
கடந்த திங்கட்கிழமை கட்சியின் உயர்பீடம் எடுத்த முடிவுக்கு அமையவே இந்த விலகல் இடம்பெற்றது.
அதேநேரம் நேற்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கும் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொண்டார்.
இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேனவுக்கா. மஹிந்தவுக்கா? தமது ஆதரவு என்பது தொடர்பில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியூதீன் தலைமையில் கட்சியின் உயர்பீடம் ஹபரணையில் கூடி முடிவெடுக்கவுள்ளது.
Comments
Post a Comment