கல்முனை மாநகர சபையில் குழப்பம் கைகலப்பு
கல்முனை மாநகர சபையில் குழப்பம் கைகலப்பு சம்பவம் இன்று இடம் பெற்றது. கல்முனை மாநகர சபை அமர்வு இன்று மாநகர முதல்வர் சட்ட முதுமாணி நிசாம் காரியப்பர் தலைமையில் இடம் பெற்றது.
எதிர் அணி உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் பிரேரணை யொன்றை சபைக்கு கொண்டு வந்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்தே உறுப்பினர்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது . இதனால் ஆளும் தரப்பு உறுப்பினர் பிர்தௌஸ் தலையில் காயம் அடைந்து கல்முனை அஸ்ரப் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் .இந்தஇக்கட்டான நிலைமையை அடுத்து முதல்வரினால் சபை அமர்வு ஒத்திவைக்கப் பட்டது . சம்பவம் தொடர்பாக கல்முனை மாநகர முதல்வர் நிசாம் காரியப்பரினால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது.
Comments
Post a Comment