சமூகமட்டவிபத்துக்கள் குறைப்புதொடர்பானசெயற்திட்டத்தின் அறிமுகக் கலந்துரையாடல்


சுரேஸ்
யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியில் சர்வோதயம் அமைப்பு அமுல் படுத்தும் இவ்வருடத்திற்குரிய செயற்திட்டத்தின் சமூகமட்டவிபத்துக்களைகுறைத்தல் எனும் கருத்திட்டத்தின் அதன் ஒரு பகுதியா கவவுணதீவூ பிரதேசத்திற்குட்பட்ட பிரிவிற்கான கலந்துரையாடல் வவூணதீவூ பிரதேசசெயலனத்தின்  உதவி பிரதேசசெயலாளரர்  எஸ். ராஜ்பாபு தலைமையில் நேற்று  26 பிரதேச செயலகத்தின் கேட் போர்  கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் சமூகமட்டவிபத்துக்களில் இலகுவில் பாதிப்புக்குள்ளாகும் சிறுவர் பெண்களுக்கான விழிப்புணர்வுகள் மற்றும் திட்டத்தின் அறிமுகம் யானைத் தாக்குதல்,கிருமிநாசினிகள் கையாழ்தலின் பாதிப்பு,பாலுட்டும் தாய்மார்களின் கவலையி ன்மைபோன்றவிடயங்கள் தொடர்பான  கிராமசேவகர்  பிரிவுகளில் விழிப்புணர் வூட்டப்படவேண்டும் எனதீர் மானிக்கப்பட்டது.
இதன் போது சர்வோதய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர்  எஸ்.மதனகுமார்  திட்டம் தொடர்பாக அறிமுகப்படுத்தியதுடன் வவுணதீவூபொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.டி நசீர் பிரதேசசெயலகத்தின் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் டி.பிரபாகரன் மற்றும் கிராமசேவகர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்  உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது




Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்