ஹரீஸ் MP தொடர்பில் வெளிவந்த செய்தியில் உண்மையில்லை
ஆர்.யோகராஜன் MP
திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜனிடம் கூறியதாக வெளிவந்துள்ள மைத்திரிபால இல்ல அவரின் அப்பன் வந்தாலும் மகிந்தையை ஒன்றும் செய்ய முடியாது என்ற செய்தி தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜனிடம் கல்முனை நியூஸ் செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் எம்.பி. ஜனாதிபதி தேர்தல் சம்மந்தமாக என்னிடம் எதுவும் பேசவில்லை, நான் ஊடகங்களுக்கு எந்தவித அறிக்கையும் கொடுக்க வில்லை இது பொய்யானதொரு செய்தி என்று இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு ஆர்.யோகராஜன் எம்.பி தெரிவித்தார்.
கல்முனை நியூஸ் செய்திப்பிரிவு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸை தொடர்பு கொண்டு கேட்டபோது
நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்த விடயம் உண்மை ஆனால் கட்சி சம்மந்தமாக நான் எதனையும் அவரிடம் கூறவில்லை மேற் குறித்த செய்தி எனது பெயரை அம்பாரை மாவட்ட மக்களிடம் மலினப்படுத்த நினைக்கும் ஒரு பொய்யான செய்தி என்பதுடன் இச்செய்தியினை வெளியிட்டுள்ள இணையத்தள உரிமையாளர் ஒரு அதிகாரம் மிக்க அரசியல் வாதியின் ஊடகச்செயலாளராக இருப்பவர் அதனால் இதுபோன்ற பொய்யான செய்திகள் கடந்த வாரத்தில் மூன்று முறை அதே இணையத்தளத்தில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது சம்மந்தமாக நான் தக்க நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். மக்கள் அனைத்தையும் அறிந்தவர்களாக இருக்கிறார் எனது அரசியல் நடவடிக்கையை சீர் குலைக்க நினைக்கும் நப்பாசையான இச்செய்திகளுக்கு நான் ஒரு போதும் அஞ்சப்போவதில்லை நான் யார் என்பதை மக்கள் அறிவார்கள் இவ்வாறான் பொய் பிரசாரங்களால் என்னையும் மக்களையும் தூரப் படுத்த முடியாது. மக்கள் என்றும் என்னுடன் விசுவாசமாக இருக்கின்றனர். அதுபோலவே அவர்களுடனும் நான் விசுவாசமாக மக்களின் குறை நிறைகளை அறிந்து சேவை செய்து வருகிறேன் என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment