மருதமுனை SLTJ யின் கௌரவிப்பு விழா
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை ஏற்பாடு செய்துள்ள தரம் 5 புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா வெள்ளிக்கிழமை மருதமுனையில் நடை பெறவுள்ளது .
எம்.ஐ.முகம்மத் பிராஸ் தலைமையில் மருதமுனை கலாச்சார மண்டபத்தில் நடை பெறவுள்ள இவ்விழாவில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகவும் , பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான ஏ.சி.எம்.தௌபீக் ,எஸ்.எல்.ஏ.ரஹீம், பீ.எம்.வை அரபாத், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் ,மற்றும் அதிபர்களும் , முக்கிய பல பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் .
Comments
Post a Comment