திகாமடுல்ல மாவட்டத்தில் 4 இலட்சத்து 65 ஆயிரத்து 757 பேர் வாக்களிக்கத் தகுதி
ஏ.பி.எம்.அஸ்ஹர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் 4 இலட்சத்து 65 ஆயிரத்து 757 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் திலின விக்ரமரட்ன தெரிவித்தார்.
இதன்படி அம்பாறை தேர்தல் தொகுதியில் 161,999 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியல் 80,357 பேரும் கல்முனைத் தேர்தல் தொகுதியில் 71,254 பேரும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 152,147 பேரும் இவ்வாறு வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.
இதே வேளை, வாக்களிப்பதற்கென 464 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment