பெண்கள் வாழ்வின் பல நொண்டிச் சாட்டுகளின் மூலமாக நலிவடைந்து போகின்றனர்


தற்போது உள்ள பெண்கள் தொழில் முயற்சிகள் எதுவும் இல்லாது பல நொண்டிச்சாட்டுகளினால் நலிவடைந்து போகின்றனர் அதனால்தான் ஆண்களில் தங்கிவாழ்கின்ற சூழ்நிலைகள் காணப்படுகின்றது என தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் எஸ்.ஏ.எம்.சலீம் மௌலானா கருத்துத்து தெரிவிக்கின்றார்.
இன்று 25.11.2014 மட்டக்களப்பு வாலிப கிறிஸ்தவ சங்கம் ஏற்பாடு செய்திருந்த திட்டம் செயற்படுத்தும் 25 பிரதேசத்தின் இளம் பெண்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் பயிற்சி நிலையத்துடன் இணைத்துக் கொள்ளும் ஆலோசனைக் கருத்தரங்கின் போது கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்..
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்......
தற்போது உள்ள பெண்கள்
சமூதாயம் ஆண்களில் தங்கி வாழ்கின்ற சூழ்நிலைகள் பல காணப் படுகின்றது தங்கி வாழ்கின்ற மனப்பாங்கு இருப்பின் வாழ்க்கையை முன்னேற முடியாது அதில் சரியான காரணம் பெண்கள் எதுவித தொழில் முயற்சிகளும் இன்றி வாழ்கின்றனர். ஆனால் அதற்கு சில நிறுவனங்களினால் சந்தர்ப்பங்கள் வழங்கினாலும் நொண்டிச் சாட்டுகளினால் நலிவடைந்து போகின்றனர் பெண்கள் பலமாக்கிக் கொண்டால் ஆணாதிக்கம் ஒருபோதும் இருக்காது அதன் முதற்படி எமது வாழ்க்கைப்பாதையை திட்டமிட்டு எம்மை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அதிலும் இலட்சியமான வாழ்க்கைத் திட்டம் வெற்றிப்பாதைக்கே கொண்டு சென்று விடும்.
வெற்றிப்பாதையில்  அமையக் கூடியவை இலட்சியமான கனவுடன் கூடிய நகர்வு தகவல்களை பெறுதலும் சேகரித்தலும் பலங்கள் மற்றும் நேரமுகாமைத்துவம் இருப்பின் திட்டதை சரியான முறையில் வாழ்வின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையும் ஆகையினால் தொழில்பயிற்சிகள் வழி காட்டல்கள் மூலமாக சிறந்த ஆலோசகளை பெற்றுக் கொண்டு நிலையான வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும் என அவர் உரையாற்றினார்.
பெண்களது தொழில் வாய்ப்புக்கான ஆலோசனை கருத்தரங்கும் தொழில் பயிற்சி நிலையத்துடன் இணைத்துக் கொள்ளும் செயற்பாடும் வை.எம்.சீ.ஏ அமைப்பின் கேட்போர் கூடத்தில் அமைப்பின் தொழில் பயிற்சி தொழில் வழிகாட்டல் உத்தியோகஸ்தர் செ.பி. அலெக்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இவ்வாலோசனை கருத்தரங்கின் தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் உத்தியோகத்தர் டி.உதயராஜா மற்றும் தொழில் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரிகள், வை.எம்.சீ.ஏ நிறுவனத்தின் பொதுச் செயலாளர் டீ.டீ.டேவீட், திட்டத்தலைவர் எஸ்.பற்றிக் அத்து
டன் வெளிக்கள உத்தியோகத்தர்கள் பயஸ்கிருசாந்தன் , லோஜீனி ஆகியோர் கலந்து கொண்டதுடன் தொழில் முக்கியத்துவம் சரியான தொழிலை தெரிவு செய்தல் வியாபார விரிவாக்கம் போன்ற பல விடயங்கள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் தொழில் பயிற்சி நிலையத்தின் பாடநெறிக்கான ஆட்களும் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.





Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்