2015-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்!
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் 2015ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக 95 வாக்குகளால் சற்று முன்னர் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 24-ம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2015-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்திருந்தார்.
மறுநாள் முதல் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்று வந்ததுடன் நவம்பர் மாதம் முதலாம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது நூறு மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடத்தப்பட்டது. இதன்போது வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 152 வாக்குகளும், எதிராக 57 வாக்குகளும் பெறப்பட்ட நிலையில் வரவு செலவுத்திட்டம் 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி என்பன எதிராக வாக்களித்திருந்தன.
Comments
Post a Comment