கல்வி மேம்பாடுக்கான உதவி வழங்குதல்


எஸ்.ரி. ஏ சொலிடரிட்டி பவுண்டேசன் அமைப்பினால்  கிளிநொச்சி, முல்லைத்தீவு எல்லைக்கிராம உறவுகளை இழந்த, அங்கவீனமுற்ற குடும்பங்களைச் சேர்ந்த 30 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கிளி/ குமாரசாமிபுரம் அ.த .க பாடசாலையில் மாற்று திறனாளிகள் செயற்கை உறுப்பு அமைப்பின்  இணைப்பாளர் அ.அன்ரனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு முல்லைத்தீவு மாவட்ட உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. த.மைக்கல்தியாகராஜா, விஸ்வமடு திருச்சபை பங்குத்தந்தை வண. அசோக்   எஸ்.ரி. ஏ சொலிடரிட்டி பவுண்டேசன் அமைப்பின் செயலாளர் திரு. வே. வாமதேவன் ,புன்னைனீராவி கிராம சேவகர் கோ. சேகர் மற்றும் பெற்றோர்களும் பிள்ளைகளும் கலந்து கொண்டனர். 

இதன் போது பிள்ளைகளுக்கு வேண்டிய கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கிவைக்கப்பட்டது.  எஸ்.ரி. ஏ சொலிடரிட்டி பவுண்டேசன் அமைப்பினால் ஏற்கனவே கிளிநொச்சியில் உள்ள தந்தையை இழந்த 20 பிள்ளைகளுக்கு ஒரு வருடமாக கல்வி மேம்பாட்டுக்கு மாதாந்தம் 3000/- வழங்கப்பட்டு வருகின்றமையும்,  கிளி/மயில்வாகனபுரம்   அ.த .க பாடசாலை மாணவர்களுக்கும் கற்றல் உபகரணகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்