நீல சேட் அணிந்தால் மகிந்தவுக்கு ஆதரவா ? முட்டாள் தனமான அரசியல் சிந்தனை

ஏழைகளின் தோழனாக விளங்கும்  கிழக்கு மாகாண  சபை உறுப்பினர்  பேராசிரியர்  எம்.ராஜேஸ்வரன்  என்றும்  உதவிக்கரம் நீட்டுபவர் . ஏழைகளை அரவணைப்பவர் , நாள் தவறாது ஆலயம் சென்று வழி  படுபவர் . வருடம் தோறும் தனது பிறந்த நாளை  வறியவர்கள் , வலது குறைந்தோர் ,அனாதைகளுடன்  இணைந்து  எதையாவது அவர்களுக்கு கொடுத்து விட்டு அன்றைய பொழுதை அவர்களுடனேயே கழிப்பவர் . 

அவ்வாறான ஒருவரை அரசியல் நாகரிகமற்றவர்கள்  கேவலப் படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் . தனது பிறந்த தினமான 18.11.2014 அன்று  இந்த நாட்டின் ஜனாதிபதியின்  பிறந்த நாளுமாகும்  அதற்காக  அவர் நீல சேட்  அணிவதும்  ஏழைகளுக்கும் ஆலயங்களுக்கும் உதவுவதும்  குற்றமாகுமா . அவரது அரசியல் வளர்ச்சியை பொறுக்க முடியாத  போக்கணம் கெட்ட  அரசியல் வாதிகளே  ஜனாதிபதியின் பிறந்த தினத்துடன் இவரையும் சேர்த்து முடிச்சிப் போட்டு மக்கள் மத்தியில் அவப் பெயரை உண்டு பண்ணுகின்றனர். இவரின் கொடை வள்ளல் தனத்தை  இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகளினால்  தடுத்து விட முடியாது .
அவர் வாரி வழங்கும் தன்மை கொண்டவர் என்பதை  அரசியலுக்கு வர முன்பே  தமிழ் முஸ்லிம் மக்களுக்கு நன்றாக தெரியும் . தனது பிறந்த நாள் தினமன்று  வறிய மக்களுக்கு  உதவி வழங்கியதையும்,ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டியத்தையும்  விமர்சனம் செய்யும்  கேடு கேட்ட  குறுகிய நோக்கம் கொண்ட அரசியல்  இயலாமிகள்  அவர் செய்யும் நல்ல பணிக்கு தடையாக இருக்கக் கூடாதென்பது  தாழ்வான கருத்தாகும் .

ஏறத் தெரியாதவனுக்கு   முடவன் மீது  கோபம் இழுக்கத் தெரியாதது எருது மேலே  கோபம் என்பது போல  உங்களால் முடியா விட்டால் செய்பவனுக்கு உதவி செய்யுங்கள் . மாகாண  சபை உறுப்பினர் ராஜேஸ்வரன் பரம் பரை  பணக்காரன் அல்ல  அவர் சிறு வயதில்  இருந்து  தனது குடும்பத்தை கட்டிக்காத்து  மிகவும் கஷ்டப் பட்டு உழைத்து முன்னேறியவர் . ஏழைமக்களை இனங்கண்டு வாரி வழங்குபவர் . மாணவர்களின் கல்விக்கு  அள்ளிக் கொடுப்பவர் .  இவ்வாறான ஒருவருக்கு  மாகாண  சபை பதவி இறைவன் கொடுத்த வரம். அதனை அவர் உங்களைப் போன்று  பைகளை நிரப்பாமல் மக்களுக்கு  அள்ளிக் கொடுக்கின்றார் . இதனை பொறுத்துக் கொள்ள முடியாத  கீழ்த்தரமான அரசியல் செய்யும் நீங்கள்  செய்வதற்கு வழி   தெரியாது  அவர் மீது அபாண்டங்களை சுமத்துகின்றீர்கள் . இறைவன்  அவருக்கு துணையாக இருப்பான்  அவர் மீது நீங்கள் சுமத்தும் குற்றங்களுக்கு விரைவில் நீங்கள் தண்டனையை அனுபவிப்பீர்கள் .

இதே போன்றதொரு ஈனச் செயலை கடந்த வருடமும் அவர் மீது சுமத்தியது எமக்கு நினைவு இருக்கிறது . அவர்  நடை பெற்ற நிகழ்வுகளில் மாற்றுக் கட்சிக் காரரை  உடன் அழைத்து செல்லவில்லை  மாறாக அவர் நேசிக்கின்ற  தமிழ் தேசிய கூட்டமைப்பு  ஆதரவாளர்களும் ,அங்கத்தவர்களுமே  உடன் சென்றனர் . 
தான் ஆலயத்துக்குள் செல்ல முடியாத கட்டுப் பாடு இருந்த போதிலும் 15 ஆம் கொலனி  வேம்பயூர் செல்வ விநாயகர் ஆலய  வசந்த மண்டபத்துக்கான அடிக்கல்லை தனது பாரியாரைக் கொண்டு நட்டு வைத்த  ஒரு இறை பக்தன்  ஆவார் 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்