மாகாண ஆளுநர்களின் வருடாந்த மாநாடு நவ.29ஆம் திகதி!
மாகாண ஆளுநர்களின் வருடாந்த மாநாடு இம்மாதம் 29ஆம் முற்பகல் 8.30மணிக்கு கதிர்காமம் மந்தாரா ரொஷேன் ஹோட்டலில் நடைபெறும். கடந்த ஆண்டு சப்ரகமுவை மாகாண ஆளுநர் வீ.ஜே.மு.லொக்குபண்டார இந்த
மாநாட்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவர் இம்முறை அந்த தலைமை பதவியை ஊவா மாகாண முதலமைச்சர் நந்தா மெத்யூவுக்கு வழங்கவுள்ளார்.
இதன்படி ஊவா மாகாண முதலமைச்சர் நந்தா மெத்யூ தலைமையில் நடைபெறும் இந்த 17ஆவது வருடாந்த மாநாட்டில், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ,மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, கிழக்கு மாகாண ஆளுநர் வைஸ் அத்மிரல் மொஹான் விஜேவிக்கிரம, வட மத்திய மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுல்கனே, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ,தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ பலல்ல ,சப்ரகமுவை மாகாண ஆளுநர் வீ.ஜே.மு.லொக்குபண்டார மற்றும் மாகாண சபைகளின் செயலாளர்கள் ஆகியோரும் கலந்துக் கொள்வர்.
Comments
Post a Comment