கல்முனை வலயக் கல்வி அலுவலக நிருவாக அதிகாரியாக பரஞ்சோதி சுந்தரி நியமனம்
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய நிருவாக உத்தியோகத்தராக திருமதி பரஞ்சோதி சுந்தரி நியமனம் செய்யப் பட்டுள்ளார் .
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்திய சாலையில் நிருவாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இவர் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் ஏற்பட்ட நிருவாக உத்தியோகத்தர் வெற்றிடத்துக்கு கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் நியமிக்கப் பட்டுள்ளார் . கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நிருவாக உத்தியோகத்தராக கடமையாற்றிய ஏ.எல். ஜுனைதீன் ஓய்வு பெற்று சென்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப் பட்டுள்ளார் .

Comments
Post a Comment