Posts

குடிசன மதிப்பீட்டின் முதற்கட்ட அறிக்கை இன்னும் இரண்டு தினங்களில்

Image
2011 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் முதற்கட்ட அறிக்கை இன்னும் இரண்டு நாட்களில் வெளிவருவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அதேவேளை இரண்டாம் கட்ட அறிக்கையானது இன்னும் ஒரு மாத காலப்பகுதிக்குள் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளது .  கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை நடைபெற்ற 2011 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு ஒன்றரை மாதத்திற்குப் பின்னர் வெளிவரவுள்ளது.  இவ்வறிக்கையானது மாவட்ட ரீதியிலான சனத்தொகை மதிப்பீட்டினை உள்ளடக்கியதாகவும், 1981 மற்றும் 2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பீடு செய்யப்பட்டு வெளிவருமென குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் சிரேஷ்ட புள்ளி விபரவியலாளர் திருமதி மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தன் தேசியக் கொடியை தாங்கி நிற்கும்போது, புலிக்கொடியுடன் ஓடியவர்கள் யார்?

Image
நேற்று யாழ்பாணத்தில் தொழிலாளர் தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றது. குறிப்பிட்ட நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியும் , தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றாக இணைந்து ஒர் மேடையில் தோன்றினர். இம்மேடையிலே தமிழ் மக்களின் மூத்த தலைவர் என வர்ணிக்கப்படுகின்ற இரா சம்பந்தன் அவர்கள் இலங்கையின் தேசியக்கொடியை மிகவும் உயரப்பிடித்து நிமிர்ந்து நின்றதுடன், அதே நிகழ்வில் விஷமிகள் சிலர் புலிக்கொடியுடன் ஓடியும் ஒருவர் தனது மேல் உள்ளாடையில் தமிழீழம் பொறித்த ரீசேட் ஒன்றை அணிந்திருந்து அதை திறந்து காட்டியுமுள்ளார்.  இன்று இந்நிகழ்வு பலராலும் பலகோணங்களில் நோக்கப்படுகின்றது. இலங்கை இராணுவப் புலனாய்வுப்பிரிவினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதோர் விடயமென புலிகளின் தரப்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் புலிகளின் செயற்பாடுகளுக்கு இடமில்லை என்பதும், அங்குள்ள இளைஞர்கள் புலிகளுக்கு உதவ தயாரக இல்லை என்பதுவுமே இலங்கை புலனாய்வுத்துறையினரின் கருத்தாகவுள்ளபோது அக்கூற்றினை தோற்கடிக்ககூடிய மேற்படி செயலை அவர்கள் செய்வார்களா? என்பதும் அதனால் அவர்கள் அடையப்போகும் லாபம் என்ன என்பதுவுமே கேள்விகளாகும்.  எவ்வாறாயினும்...

மு.கா. தொடர்ந்தும் அரசுடன் இணைந்திருக்கும் !

Image
தலைவர் ரவூப் ஹக்கீம்  தகவல்  - அரசாங்கத்திற்கான  முழுமையான ஒத்துழைப்பை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் நல்கும் என அக்கட்சியின் தலை வர் அமைச்சர் தெரிவிக்கின்றார். நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் மேற்கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் மூலம் அவர்களைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குக் கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐ.ம.சு.முன்னணியின் ஐக்கிய மேதினப் பொதுக்கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு மாநகரசபை மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந் தும் உரையாற்றுகையில்  ஸ்ரீ.மு.கா மேதின வைபவங்களில் கலந்து கொள்ளும் பாரம்பரியத்தைக் கொண்ட கட்சி அல்ல. என்றாலும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில்கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஐக்கிய மேதினக் கமிட்டித் தலைவரும்  அமைச்சருமான டளஸ் அளகப்பெரும விடுத்த அழைப்பை ஏற்று இவ்வைபவத்தில் கலந்துகொண்டிருக்கின்றேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உரையாற்றுகின்ற முத லாவது மேதினக் கூட...

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையில்

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஆறு மணி நேர சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது .பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட   சத்திர சிகிச்சையின் போதூ   பெரியதொரு கட்டி வெட்டி அகற்றப் பட்டுள்ளது  சத்திர சிகிச்சை வைத்திய அதிகாரி  டாக்டர்  ஏ.டபிள் யு எம்.சமீம் தலைமையில் இந்த   சத்திர சிகிச்சை நடை பெற்றது .

துப்பாக்கிச் சூட்டில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரின் சகோதரர் படுகாயம்

Image
நேற்றிரவு திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அட்டாளைச்சேனை பிரதேசசபை தவிசாளரின் சகோதரர் படுகாயமடைந்துள்ளார். இதேநேரம் இவர்மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றவர்களை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றபோது இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த வியாபாரி இளைஞனொருவர் ஆபத்தான நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளரின் தம்பியான அகமட்லெப்பை நஸீம் (வயது 39) நேற்றிரவு 7.30 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதான வீதியிலுள்ள பாலத்திற்கு அருகில் தனது காரை நிறுத்திவிட்டு சிலருடன் உரையாடிக் கொண்டிருந்தார். இவ்வேளையில் அவ்விடத்திற்கு ஆட்டோ ஒன்றில் வந்தவர்கள் இவர்மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து கீழே விழுந்தவரை அங்கு நின்றவர்கள் உடனடியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டுசென்ற அதேநேரம், ஆட்டோவில் தப்பிச் சென்ற ஆயுததாரிகளை, சில இளைஞர்கள் இரு மோட்டார் சைக்கிள்களில் விரட்டிச் சென்றுள்ளன...

சம்பத் வங்கியின் 208 வது கிளை மூதூரில்திறந்து வைக்கப் பட்டது

Image
சம்பத் வங்கியின் 208  வது கிளை மூதூரில் அண்மையில் திறந்து வைக்கப் பட்டது .வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதி பொது முகாமையாளர் சமன் ஹேரத் மங்கள விளக்கேற்றி வைத்து நாடா வெட்டி வங்கி கிளையை திறந்து வைப்பதையும் ,வங்கி முகாமையாளர் நாஜில் பாரூக் உட்பட அதிதிகள் அருகில் நிற்பதையும் காணலாம்.

ஜனாதிபதி நாடு திரும்பினார்!

Image
தென் கொரியாவுக்கான நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் நாடு திரும்பினார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜனாதிபதி குழுவினரை அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் வரவேற்றனர். ஜனாதிபதியின் தென் கொரிய விஜயம் காரணமாக இலங்கையில் கொரிய நிறுவனங்கள் பாரிய முதலீடுகளைச் செய்யும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருதில்துஆப் பிரார்த்தனை

Image
தம்புள்ளை ஜும்ஆ மஸ்ஜித் விவகாரம் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆத தொழுகையைத் தொடர்ந்து சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் வெளி வளாகத்தில் விசேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது. இதன்போது பள்ளிவாசல் முன்னால் பிரதான வீதியை மறித்து நின்று ஒரு தொகை மக்கள் துஆப் பிரார்த்தனையில் பங்கேற்றனர். இதன் காரணமாக சுமார் 15 நிமிடங்கள் இப்பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. எனினும் அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மக்களை வீதியை விட்டு அகற்ற முற்படவில்லை. வீதியை மறித்து நடத்தப்பட்ட துஆப் பிரார்த்தனையை அவர்கள் அமைதியாக நின்று அவதானித்துக் கொண்டிருந்தனர். இவ்விசேட துஆப் பிரார்த்தனை நிறைவடைந்ததும் மக்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் வேண்டுகோளின் பேரில் இன்று நாடு முழுவதும் அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல் முற்றத்திலும் இவ்விசேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ மஸ்ஜிதில் ஜும்ஆ

Image
 இன்று தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ மஸ்ஜிதில் ஜும்ஆ இடம்பெற்றது அதில் சுமார் ஆயிரம் பேர்வரை கலந்துகொண்டனர்.அகில இலங்கை ஜம்இயதுல் உலமா வேண்டிகொண்டமைக்கு அமைவாக துவா பிராத்தனையும் இடம்பெற்றது. 

முஸ்லிம்களின் ஆயுதம் பிரார்த்தனையே!

Image
தம்புள்ளையில் நடந்து முடிந்த பள்ளிவாசல் தாக்குதலையடுத்து நாடெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் மிகுந்த கவலையிலும் சமூக ஒற்றுமை சீர்குலைந்து விடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர். சிலர் மேற்படி விடயத்தை கண்டிக்கவும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் தூண்டுகின்றன. இந்நிலையில் இஸ்லாம் காட்டிய வழிமுறையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நினைவூட்ட விரும்புகிறது. பிரார்த்தனையே ஒரு முஸ்லிமின் ஆயுதம் என்ற அடிப்படையில் துஆக்கள்- தெளபா- இஸ்திஃபார்- சுன்னத்தான நோன்புகள் ஆகியவற்றை கடைப்பிடிக்குமாறு வேண்டிக் கொள்ளும் அதேநேரம் சட்ட ரீதியாகவும் ஒழுங்காகவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறது. பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதோ- சாலைமறியல்களில் ஈடுபடுவதோ- வீதிப்போக்குவரத்துக்கு குந்தகம் விளைவிப்பதோ கூடாது. அதேநேரம் ஒட்டுமொத்தமாக எம்மோடு இணங்கி நடக்கும் பெளத்த சகோதரர்களது மனம் புண்படுமாறு நடந்து கொள்ளவதோ கூடாது. மதங்களைத் தூற்றுவதை தவிர்ப்பதுடன் நடுநிலைமை யானவர்களோடு நன்முறையில் நடந்து அவர்களது உள்ளத்தையும் நாம் வென்றிட வேண்டும். இது “நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் ...

தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்புக்கு எதிராக அம்பாறை மாவட்ட ஹர்த்தால்

Image
தம்புள்ளைப் பள்ளிவாசல் உடைப்புச் சம்பவத்தைக் கண்டித்து அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திலும் இன்று வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது.  இக்ஹர்த்தால் காரணமாக கடைகள், பாடசாலைகள், அரச அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டதில் அரசுக்கு தொடர்பில்லை: இராணுவ கட்டளை தளபதி

Image
தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரியா பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் அரசாங்கத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரோ  தெரிவித்தார். இச்சம்பவமானது சிறு இனவாத குழுக்களுக்களின் செயற்பாடேயாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் இன்று புதன்கிழமை கல்முனைக்குடி ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போதே கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "குறித்த பள்ளிவாசலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றதே தவிர, பள்ளிவாசல் உடைக்கப்படவில்லை. பள்ளிவாசல் உடைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் ஊடகங்களால் திரிவுபடுத்தப்பட்டதேயாகும். அவ்வாறு சம்பவம் இடம்பெற்றதாக நீங்கள் கருதினால் உங்கள் அனைவரையும் தம்புள்ளைக்கு கூட்டிச் சென்று குறித்த பள்ளிவாசலை காட்டுவதற்கு தான் தயாராகவுள்ளேன்" என்றார். கல்முனைகுடி ஜும்ஆ பள்ளிவாசல் தலைவரும் அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் சம்மேளன தலைவருமான டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் இட...

தம்புல்லை பள்ளியை அகற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- அமைச்சர் ஜனக பண்டார

Image
தம்புல்லை - ரன்கிரி பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளியை அகற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.   காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சில் இன்று இடம் பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  இந்தப் பிரச்சினை ஏற்கனவே தீர்க்கக்கூடியதாக இருந்த போதும், தற்போது அது பெரிதாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த நிலையில் தற்போது இந்த பள்ளிவாசலை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பள்ளிவாசல் புனித பூமி பிரதேசத்திற்கு வெளியில் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்  இது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  எனினும் பிரதமரின் நடவடிக்கைகள் இந்த விடயத்தில் உரிய விதத்தில் அமையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசுடன் மு.கா. இணைந்தமை கண்ணைத் திறந்து கொண்டே குழியில் விழுந்தமைக்கு ஒப்பானது; மீள்வது எப்படி என்றும் தெரியும் என்கிறார் ஹக்கீம்!

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் சேர்ந்த நிகழ்வானது நாம் கண்ணைத் திறந்து கொண்டே குழியில் விழுந்தமைக்கு ஒப்பானதொரு செயலாகுமென்று. ஆனால் அதிலருந்து மீள்வது எப்படி என்றும் எமக்குத் தெரியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் விடயத்தில் அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பாங்குடனும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியின் சகோதரர் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எமது முஸ்லிம் காங்கிரசை கடும்போக்குடன் புறக்கணித்து நடப்பதையும் எம்மால் தொடர்ந்தும் எங்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது எனவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போதே அமைச்சர் ஹக்கீம் இவற்றைக் கூறினார். "தம்புள்ளை பள்ளிவாசல் விவகரம் உட்பட பல விடயங்கள் முஸ்லிம் காங்கிரஸினையும் முஸ்லிம் சமூகத்தினையும் பலவீனப்படுத்துகின்ற நிகழ்வுகளாக மாறியுள்ளன. இந்த நிலையில் அரசுடனான முஸ்லிம் காங்கிரஸின் இணைவானது சர்ச்சைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. முகா. உண்மையான அடையாளத்தை ...

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் என்பது உருவாக்கப்பட்ட கதை

Image
மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக வேண்டுமென ஒரு கதையை உருவாக்கி விடப்பட்டுள்ளது . இதை நான் சந்தேகத்துடனேயே பார்க்கிறேன். இந்தக் கதையானது கட்சி நலனையோ என்னுடைய நலனையோ பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்ட செய்தியல்ல கட்சிக்குள் ஒரு குழறுபடியினை உருவாக்குவதே இந்தக் கதையில் உள்நோக்கமாகும் என்று தெரிகிறது இதற்கு நிறையப் பேர் இரையாகி விட்டார்கள் என்று ஸ்ரீ லங்காமுஸ்லிம்  காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். எமது கட்சிக்குள் இருக்கின்ற மேல் மட்டத்தவர்களே கம்பெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் எனும் பாங்கில் தங்களுடைய தனிப்பட்ட அரசியல் பிழைப்புக்காக கிழக்கு மாகாணசபைத் தேர்தல் விவகாரம் குறித்து சில முன் அறிவித்தல்களை விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது கட்சிக்கு ஆரோக்கியமானதல்ல. கட்சியில் தீர்மானிக்கப்படாததொரு விடயம் குறித்து, பகிரங்கமாக அறிவித்தல் விடுவதானது பிழையானதொரு விடயமாகும்என்று அவர் எச்சரித்துள்ளார் . அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் காத்தான்குடி கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கிழக்கு மாகாணசபை மு.கா. உறுப்பினர் யூ.எல்.எம்.எ...

தம்புள்ளை பள்ளிவாசல் சம்பவம் முஸ்லிம் நாடுகளின் மத்தியல் இலங்கை பற்றி தப்பான நிலைப்பாட்டை தோற்றுவிக்க நிச்சயமாக வழிவகுக்கும்! கல்முனை முதல்வர் சிராஸ் அறிக்கை!

Image
தம்புள்ளையில் முஸ்லிம்கள் தொழுகைக்காக பல தசாப்தங்களாகப் பயன்படுத்தி வந்த பள்ளிவாசல், ஒரு சில பேரின வாத சக்திகளின் தூண்டுதலினால் சேதப்படுத்தப்பட்டதானது ஜனநாயகத்துக்கு முரணான செயலாகும். இந்த அநாகரிகமான செயலுக்கு மதப்போதகர்கள் துணை போனமை வருத்துக்குரிய விடயமாகும். இதை தான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில் கடந்த 30 வருடங்களாக எமது நாட்டில் புரையோடிப் பேயிருந்த கொடிய யுத்தம் நிறைவுக்கு வந்து மூவின மக்களும், கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து, இன நல்லுறவை கட்டியெளுப்ப பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இத் தருணத்தில், இவ்வாறன அருவருக்கத் தக்க செயற்பாடுகள், தோற்றுவிக்கப்ட்டுள்ள, இன நல்லுறவில் விரிசலை உண்டுபண்ணும் என்பதில் எவ்வித ஐயப்பாடுகளும் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இலங்கையில் வாழும் முஸ்லிம்கள், இலங்கை நாட்டுக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல் பிரேரனைகளின்போது, நாட்டுக்காகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்காகவும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்து முஸ்லி...

கல்முனை கடற்கரைப்பள்ளி 190வது கொடியேற்றம் இன்று

Image
இலங்கையின் முக்கிய புனித ஸ்தலங்களில் ஒன்றான கல்முனை கடற்கரைப் பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹா சரீப்பின் 190வது கொடியேற்ற விழா இன்று திங்கட்கிழமை (23) ஆரம்பமாகின்றது. திங்கட்கிழமை ஆரம்பமாகும் இந்நிகழ்வில் தொடர்ச்சியாக 12 தினங்களுக்கு மெளலீது ஓதப்பட்டு சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெறவுள்ளது. இவ்விழாவானது எதிர்வரும் 5ம் திகதி மாபெரும் கந்தூரி அன்னதான நிகழ்வுடன் நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜித்தாவிற்கான இலங்கைத் தூதுவர்டாக்டர் உதுமாலெப்ப யை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் சந்தித்து கலந்துரையாடினார்

Image
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் உம்றா கடமைக்காக மக்கா நகருக்கு சென்றிருந்தபோது ஜித்தாவிற்கான இலங்கைத் தூதுவர்டாக்டர்  உதுமாலெப்ப யை  தூதுவராலயத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.  இதன்போது ஹஜ் உம்றா கடமைகளுக்காக புனித மக்கா நகருக்கு வரும் இலங்கை யாத்திரிகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பகாகவும் கலந்துரையாடப்பட்டது

தம்புள்ளை பள்ளிவாசலை அகற்ற பிரதமர் உத்தரவு; 'வேறு இடத்தில் காணி வழங்கப்படும்'

Image
தம்புள்ளையிலுள்ள சர்ச்சைக்குரிய பள்ளிவாசலை அகற்றுமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரங்;கிரி தம்புள்ள விகாரை புனித பிரதேசத்தில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளமையினால் இப்பள்ளிவாசலை உடனடியாக அகற்றுமாறும் பிரதமர் உத்திரவிட்டுள்ளார். அகற்றப்படும் பள்ளிவாசலுக்கு பதிலாக வேறு பொருத்தமான இடத்தில் இஸ்லாமியர்கள் சமய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளை பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பளையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலொன்றையடுத்து பிரதமர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். இஸ்லாமிய சமய தலைவர்கள், சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, மேல் மாகாண ஆளுநர் ர் அலவி மௌலானா, பிரதியமைச்சர்கள், அப்துல் காதர், ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் டி.எம்.ஜயரட்ண "உலகின் அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கையுடன் நட்புடன் உள்ள நிலையில் இத்தகைய சிறிய விட...

பாண்டிருப்பு பிரதேசத்தில் இன்று பதினெட்டு அடி நீளமுடைய இராட்சத முதலை ஒன்று பொது மக்களால் பிடிக்கப் பட்டு வனபரிபாலன திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது

வீடியோ காட்சி  

கல்முனையில் நடை பெற்ற பகவான் சாயி பாபா ஆண்டு நிகழ்வு

Image

கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஏ. ஆர். எம். மன்சூர்?

Image
கிழக்கிலிருந்தே வருகிறார் கிழக்கின் முதல்வர் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் இம்முறை அத்தேர்தலில் முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியும், இராஜதந்திரியுமான அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். மன்சூரை பொதுவான முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த சில கட்சிகள் கூடி ஆராய்ந்து வருவதாக நம்பகரமான வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. கிழக்கின் முதல்வர் கிழக்கிலிருந்தே வரவேண்டும் எனவும், இரண்டாவது முதல்வராக தமிழ்பேசும் இன்னுமொரு இனமான முஸ்லிம் சமூகத்திலிருந்து வரவேண்டும் எனும் கருத்துக்கள் கிழக்கில் வலுப்பெற்றுள்ள நிலையில் இவை இரண்டுக்கும் பொருத்தமான தற்போதைய தலைவராக மன்சூர் காணப்படுவதால் அவரைப் பொது வேட்பாளராக அரசாங்கத்தின் சார்பில் தேர்தலில் நிற்க வைப்பதெனும் தீர்மானத்திற்கு கிழக்கிலங்கை கட்சிகள் பலவும் கூடித் தீர்மானித்துள்ளன. அல்ஹாஜ் மன்சூர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்தவராக இருந்த போதிலும் அவர் தற்போது அக்கட்சியின் செயற்பாடுகளில் ஈடுபடாது பொதுப் பணியாற்றி வருகிறார். அத்துடன் அவர் கிழக்கில் தமிழ் மக்களுடன் மிகவும் நல்லுறவைப் பேணி அம்மக்களின் பேரபிமானத்தைப் பெற்றவராக இருந...

சகல பாடசாலைகளிலும் டெங்கு அபாய முன்னெச்சரிக்கைக்கான சிரமதானம்

Image
இரண்டாம் தவணை 23ம் திகதி ஆரம்பம்: கல்வி அமைச்சு பணிப்பு இரண்டாம் தவணைக்காக அரசாங்க பாடசாலைகள் நாளை மறுதினம் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் போது பெற்றோர், பழைய மாணவர்கள், மாணவர்கள், நலன் விரும்பிக ளின் உதவியுடன் பாடசாலைகளில் சிரமதானமொன்றை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு சகல பாடசாலைகளின் அதிபர்களிடமும் கேட்டுக் கொண்டுள்ளது. விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டமாக இந்த சிரமதான பணியை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலர் கேட்டுக் கொண்டுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பாடசாலைகள் ஆரம்பமாவதால் வகுப்பறைகள், பாடசாலை வளவுகள், கூரைகள், கூரை பீலிகள், தண்ணீர் தாங்கிகள், அலுவலகம் போன்றவற்றில் டெங்கு நுளம்புகள் இருக்கலாம் என்ற அச்சம் காரணமாகவே இச்சிரமதான பணியை திங்கட்கிழமையன்று மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. பழைய மாணவர் சங்கம், பெற்றோர், ஆசிரியர் சங்கம், நலன்விரும்பிகள், பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோரின் உதவியுடன் சிரமதானப் பணியை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலர் கேட்டுக்கொண்டுள்ளார். தேவையேற்படின் அப்பிரதேசத்திலுள்ள பொது சுகாதார உத்தியோகத்தர்களின், மாவட்ட சுகாதார அல...