மு.கா. தொடர்ந்தும் அரசுடன் இணைந்திருக்கும் !


தலைவர் ரவூப் ஹக்கீம்  தகவல்  -
அரசாங்கத்திற்கான  முழுமையான ஒத்துழைப்பை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் நல்கும் என அக்கட்சியின் தலை வர் அமைச்சர் தெரிவிக்கின்றார்.

நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் மேற்கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் மூலம் அவர்களைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குக் கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐ.ம.சு.முன்னணியின் ஐக்கிய மேதினப் பொதுக்கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு மாநகரசபை மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந் தும் உரையாற்றுகையில்  ஸ்ரீ.மு.கா மேதின வைபவங்களில் கலந்து கொள்ளும் பாரம்பரியத்தைக் கொண்ட கட்சி அல்ல.
என்றாலும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில்கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஐக்கிய மேதினக் கமிட்டித் தலைவரும்  அமைச்சருமான டளஸ் அளகப்பெரும விடுத்த அழைப்பை ஏற்று இவ்வைபவத்தில் கலந்துகொண்டிருக்கின்றேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உரையாற்றுகின்ற முத லாவது மேதினக் கூட்டம் இதுவே. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை யிலான ஐ.ம.சு.முன்னணியின் இறுதியாக இணை ந்த பங்காளிக் கட்சி ஸ்ரீ.ல.மு.கா தான். அதனால் எமக்கும் பொறுப்புக்கள் உள்ளன. இதனை நாமறிவோம்.
யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலை யில் நிறைவேற்றப்பட வேண்டிய பல பொறுப் புக்கள் உள்ளன.  அதனால் இந்த நாட்டின் முஸ்லிம் கட்சி என்ற வகையில் இச்சந்தர்ப்பத்தில் எமக்கு முக்கிய பாத்திரமுள்ளது.
அதனால் நாம் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கு வோம்.  நாட்டில் முழுமையான அமைதி யும்  சமாதானமும் ஏற்படவும்  தேசியப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகத் தீர்க்கப் படுவதற்கு  நாம் உச்ச அளவில் பங்களிப் புக்களை நல்குவோம்.
தேசியப் பிரச்சினை தொடர்பாக நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்றோம். பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் கொண்டுவர முடியுமென நம்புகின்றேன் என்றார்

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்