முஸ்லிம்களின் ஆயுதம் பிரார்த்தனையே!


தம்புள்ளையில் நடந்து முடிந்த பள்ளிவாசல் தாக்குதலையடுத்து நாடெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் மிகுந்த கவலையிலும் சமூக ஒற்றுமை சீர்குலைந்து விடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர். சிலர் மேற்படி விடயத்தை கண்டிக்கவும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் தூண்டுகின்றன. இந்நிலையில் இஸ்லாம் காட்டிய வழிமுறையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நினைவூட்ட விரும்புகிறது.

பிரார்த்தனையே ஒரு முஸ்லிமின் ஆயுதம் என்ற அடிப்படையில் துஆக்கள்- தெளபா- இஸ்திஃபார்- சுன்னத்தான நோன்புகள் ஆகியவற்றை கடைப்பிடிக்குமாறு வேண்டிக் கொள்ளும் அதேநேரம் சட்ட ரீதியாகவும் ஒழுங்காகவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறது.

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதோ- சாலைமறியல்களில் ஈடுபடுவதோ- வீதிப்போக்குவரத்துக்கு குந்தகம் விளைவிப்பதோ கூடாது. அதேநேரம் ஒட்டுமொத்தமாக எம்மோடு இணங்கி நடக்கும் பெளத்த சகோதரர்களது மனம் புண்படுமாறு நடந்து கொள்ளவதோ கூடாது.

மதங்களைத் தூற்றுவதை தவிர்ப்பதுடன் நடுநிலைமை யானவர்களோடு நன்முறையில் நடந்து அவர்களது உள்ளத்தையும் நாம் வென்றிட வேண்டும். இது “நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் இறைவன் என அழைக்கிறார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள்” என்ற அல்குர்ஆனின் அறிவுரையாகும்.

ஒரு சிலர் பள்ளிவாசல் விடயத்தில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார்கள் என்பதற்காக முஸ்லிம்களாகிய நாம் அவ்வாறு நடந்து கொள்ள முடியாது.

எமக்கென இஸ்லாம் கூறியுள்ள வரையறைகளைப் பேணி நடந்து கொள்ளவே சகல முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகிறது.

எதிர்வரும் வியாழக்கிழமையன்று (26) நோன்பு நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு சமுகந்தரும் யாவரும் பள்ளிவாசல் முற்றவெளியில் ஒன்றுதிரண்டு குறித்த செயலில் ஈடுபட்டோருக்கு உரியதை வழங்க வேண்டும் எனவும் நேர்வழி நாடி நிற்போருக்கு அதனை அல்லாஹ் வழங்க வேண்டுமெனவும் அல்லாஹ் விடம் பிரார்த்திக்குமாறு அனை வரையும் வேண்டிக்கொள்கிறது

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது