சாய்ந்தமருதில்துஆப் பிரார்த்தனை
தம்புள்ளை ஜும்ஆ மஸ்ஜித் விவகாரம் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆத தொழுகையைத் தொடர்ந்து சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் வெளி வளாகத்தில் விசேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது. இதன்போது பள்ளிவாசல் முன்னால் பிரதான வீதியை மறித்து நின்று ஒரு தொகை மக்கள் துஆப் பிரார்த்தனையில் பங்கேற்றனர்.
இதன் காரணமாக சுமார் 15 நிமிடங்கள் இப்பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. எனினும் அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மக்களை வீதியை விட்டு அகற்ற முற்படவில்லை. வீதியை மறித்து நடத்தப்பட்ட துஆப் பிரார்த்தனையை அவர்கள் அமைதியாக நின்று அவதானித்துக் கொண்டிருந்தனர்.
இவ்விசேட துஆப் பிரார்த்தனை நிறைவடைந்ததும் மக்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் வேண்டுகோளின் பேரில் இன்று நாடு முழுவதும் அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல் முற்றத்திலும் இவ்விசேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment