கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் என்பது உருவாக்கப்பட்ட கதை
மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக வேண்டுமென ஒரு கதையை உருவாக்கி விடப்பட்டுள்ளது . இதை நான் சந்தேகத்துடனேயே பார்க்கிறேன். இந்தக் கதையானது கட்சி நலனையோ என்னுடைய நலனையோ பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்ட செய்தியல்ல
கட்சிக்குள் ஒரு குழறுபடியினை உருவாக்குவதே இந்தக் கதையில் உள்நோக்கமாகும் என்று தெரிகிறது இதற்கு நிறையப் பேர் இரையாகி விட்டார்கள் என்று ஸ்ரீ லங்காமுஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
எமது கட்சிக்குள் இருக்கின்ற மேல் மட்டத்தவர்களே கம்பெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் எனும் பாங்கில் தங்களுடைய தனிப்பட்ட அரசியல் பிழைப்புக்காக கிழக்கு மாகாணசபைத் தேர்தல் விவகாரம் குறித்து சில முன் அறிவித்தல்களை விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது கட்சிக்கு ஆரோக்கியமானதல்ல. கட்சியில் தீர்மானிக்கப்படாததொரு விடயம் குறித்து, பகிரங்கமாக அறிவித்தல் விடுவதானது பிழையானதொரு விடயமாகும்என்று அவர் எச்சரித்துள்ளார் .
அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் காத்தான்குடி கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கிழக்கு மாகாணசபை மு.கா. உறுப்பினர் யூ.எல்.எம்.என். முபீன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றபோதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்
Comments
Post a Comment