கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஏ. ஆர். எம். மன்சூர்?
கிழக்கிலிருந்தே வருகிறார் கிழக்கின் முதல்வர்
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் இம்முறை அத்தேர்தலில் முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியும், இராஜதந்திரியுமான அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். மன்சூரை பொதுவான முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த சில கட்சிகள் கூடி ஆராய்ந்து வருவதாக நம்பகரமான வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
கிழக்கின் முதல்வர் கிழக்கிலிருந்தே வரவேண்டும் எனவும், இரண்டாவது முதல்வராக தமிழ்பேசும் இன்னுமொரு இனமான முஸ்லிம் சமூகத்திலிருந்து வரவேண்டும் எனும் கருத்துக்கள் கிழக்கில் வலுப்பெற்றுள்ள நிலையில் இவை இரண்டுக்கும் பொருத்தமான தற்போதைய தலைவராக மன்சூர் காணப்படுவதால் அவரைப் பொது வேட்பாளராக அரசாங்கத்தின் சார்பில் தேர்தலில் நிற்க வைப்பதெனும் தீர்மானத்திற்கு கிழக்கிலங்கை கட்சிகள் பலவும் கூடித் தீர்மானித்துள்ளன.
அல்ஹாஜ் மன்சூர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்தவராக இருந்த போதிலும் அவர் தற்போது அக்கட்சியின் செயற்பாடுகளில் ஈடுபடாது பொதுப் பணியாற்றி வருகிறார். அத்துடன் அவர் கிழக்கில் தமிழ் மக்களுடன் மிகவும் நல்லுறவைப் பேணி அம்மக்களின் பேரபிமானத்தைப் பெற்றவராக இருந்து வருவதுடன், தனது கடந்தகால அரசியல் பயணத்தில் மாவட்ட மற்றும் மத்திய அமைச்சர் பதவிகளின்போது இன, மத, மொழி, பிரதேச வேறுபாடு காட்டாது சேவையாற்றி வடக்கு, கிழக்கு மக்களின் மனங்களில் தனக்கென தனியானதொரு இடத்தைப் பிடித்து வைத்துள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
வ்விடயம் தொடர்பாக அல்ஹாஜ் மன்சூரைத் தொடர்பு கொண்டு மேலும் விபரமறிய முற்பட்ட போதும் அவருடன் உடனடியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.
Comments
Post a Comment