Posts

அரசுடனான பேச்சுக்கு ஹக்கீமின் இடைத்தரகர் வேலை அவசியமில்லை; தமிழ் கூட்டமைப்பு நிராகரிப்பு!

Image
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது தமக்கு இடைத்தரகர் ஒன்று அவசியமில்லை என்று  தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு தான் இடைத் தரகராக செயற்படத் தயார் என்று மு.கா.தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு பகிரங்கமாகத் தெரிவித்துள்ள நிலையிலேயே கூட்டமைப்பு அவரது பிரசன்னத்தை நிராகரித்துள்ளது. இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள கருத்துக்களின் போதே இடைத்தரகர் அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களை மு.கா.தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்தித்து பேச்சு நடத்தியதாகவும் அதன்போது மத்தியஸ்த பணி தேவை இல்லை என சம்பந்தன் கூறியதாகவும் அறிய முடிகிறது. அரசின் ஓர் அமைச்சர் என்ற வகையில் முடியுமானால் காத்திரமான பேச்சுவார்த்தைக்கு அரசை வலியுறுத்துமாறு ஹக்கீமிடம் அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பேசுகிறோம்

கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகள் இன்றிரவு கலைக்கப்படும்?

Image
கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகள் இன்றிரவு கலைக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வறட்சி மற்றும் ரமழான் நோன்பு காலத்திற்கு மத்தியில் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளை கலைப்பதா என்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்றிரவு கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போது இம்மாகாண சபைகளை கலைப்பது என தீர்மானிக்கப்பட்டது. இம்மாகாண சபைகளை கலைத்து செப்டெம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது ஆளும் கட்சி முக்கியஸ்தர்களின் கருத்தாக இருந்தது. 

மாடு முகத் தோற்றமுடைய மீன் பிடிப்பு!

Image
நீர்கொழும்பு கடற்பகுதியில் மாடு ஒன்றின் முகத் தோற்றத்தை கொண்ட மீன் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. அதனை நீர்கொழும்பு தளுபத்தை விளையாட்டு மைதான மாவத்தையை சேர்ந்த எம். அஸ்ரப் என்பவர் நீர்கொழும்பு கொட்டுவ திறந்த மீன் விற்பனை சந்தையில் விலை கொடுத்து வாங்கியுள்ளார். ஒரு கிலோகிரேம் நிறை கொண்ட இந்த மீனின் கண்கள், வாய், மூக்கு, கொம்புகள் மாட்டின் முகத் தோற்றத்தை கொண்டதாக உள்ளது.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று

Image
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று (26.06.2012) செவ்வாய்க்கிழமை காலை சபைத் தவிசாளர் (சபாநாயகர்) எச்.எம்.எம். பாயிஸ் தலைமையில் ஆரம்பமானது. இவ் அமர்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பை, கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் பிரசன்னமாயிருந்தனர். இவ் அமர்வுக்கு விவசாயத்துறை அமைச்சர் துரையப்பா நவரத்தினராஜா, சுகாதார அமைச்சர் சுபைர் ஆகியோர் வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமர்வு தொடர்பான மேலதிக தகவல்கள் மிக விரைவில்...

கலாசார விழாவும் முனை மலர் நூல் வெளியீடும்

Image
கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2012ஆம் ஆண்டிற்கான 'கலாசார விழா' நிகழ்வும், 'முனை மலர்' நூல் வெளியீடும்  ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றதுடன், கலாசார பேரவை உறுப்பினர்கள் பலரின் ஆக்கங்களும் வெளிப்படுத்தப்பட்டன. கல்முனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி  பீ.பத்பராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலாசார பேரவையின் தலைவரும், பிரதேச செயலாளருமான எம்.எம்.நௌபல் கலந்துகொண்டதுடன், அதிதிகளாக கவிஞரும், நிர்வாக உத்தியோகத்தருமான எம்.பி.அபுல்ஹஸன், எழுத்தாளரும் தலைமை நிர்வாக கிராம உத்தியோகத்தருமான ஏ.எச்.ஏ.லாகிர், மொழிபெயர்ப்பாளர் என்.நயீம், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஸாலிஹ், பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.எல்.எம்.ஜெபர் உட்பட கலைதுறை சார்ந்தோர் பலரும் கலந்துகொண்டனர்.

வீதி அபிவிருத்தியில் எந்தவொரு பிரதேசத்திற்கும் அநீதி இழைக்கவில்லை;

Image
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை  .கிழக்கு மாகாணத்தில் ஜெயகா திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீதி அபிவிருத்தி திட்டத்தில் எந்தவொரு பிரதேசத்திற்கும் அநீதி இழைக்கப்படவில்லை என்று கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் ஜெயகா திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீதி அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று அட்டாளைச்சேனை கூட்டுறவுச் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார். “ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் ஊடாக கிழக்கு மாகாண சபைக்கு வீதி அபிவிருத்திக்காக 6500௦ மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் யுத்தம், சுனாமி மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலேயே இந்த வீதி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்முனைத் தொகுதியில் 674 மில்லியன் ரூபாவுக்கான வீதி அபிவிருத்திப் பணிகள் முன்மொழியப்பட்டு, அவற்றுள் அநேகமான வீதிகள் பூர்த்தியடைந்தும் இன்னும் சில வீதிகள் நிர்மாணிக்கப்பட்ட

புதிய இஸட் புள்ளியை தயாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Image
முன்னைய பட்டியல் இரத்து  - 2011ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பாகு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள  இஸட் புள்ளி பட்டியலை இரத்துச் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு தனித்தனியாக கணிப்பீடு செய்து புதிய  இஸட் புள்ளி  பட்டியல்களை  கூடிய விரைவில் வெளியிடுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லையேல் பதவி விலகுவேன் என்கிறார் ரிசாட்

Image
அரசிற்கு எதிரான தரப்பினர் குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப் படாவிட்டால் பதவி விலக நேரிடும் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கத் தவறி னால் பதவி விலக வேண்டி நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அமைச்சர் களைக் கொண்ட குழுவொன்றை அமைக் குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத் துள்ளார். முஸ்லிம் மக்கள் துரதிஸ்டவசமாக தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அனைத்து கட்சி குழுவொன்றை அமைக்குமாறு அண் மைய அமைச்சரவை கூட்டமொன்றில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்றை அமைத்து முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டம் இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என அமைச்சர் பதியுதீன் தெரிவித்துள்ளார். பள்ளிவாசல்கள் மற்றும் ஏனைய முஸ்லிம் மதநிறுவனங்கள் மீது தொடர்ச்சியாக

மதுச்சாலையில் மது அருந்தும் பிரியர்களினால் மதக்கலாசார சீரழிவுகளும், இனமோதல்களும்

Image
கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நற்பிட்டிமுனை கிராமத்தின் பிரதான வீதியில் இயங்கிக் கொண்டிருக்கும் மதுச்சாலையில் மது அருந்தும் பிரியர்களினால்  மதக்கலாசார சீரழிவுகளும், இனமோதல்களும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிப்பதனால் அந்த மதுபாவனைச்சாலையை அங்கிருந்து அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட மகஜரொன்றை கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், பளீல் பவுண்டேசன் சமூக சேவை அமைப்பின் தலைவருமான தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ளார். அம்மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறிப்பிட்ட மதுச்சாலைக்கு கிழக்கு புறமாக அம்பலத்தடி ஆலயமும், பொது விளையாட்டு மைதானமும், மேற்குப் புறமாக சிவசக்தி வித்தியாலயம், அல்-அக்ஷா மகா வித்தியாலயமும் தெற்குப் புறமாக வேப்பையடி விநாயகர் ஆலயமும் அண்மித்துள்ளன. ஊருக்கு மத்தியில் கூடிய இடத்தில் அமைந்துள்ள இந்த மதுச்சாலைக்கு மது அருந்துவதற்காக அயல் அதிகமானோர் வருகின்றனர். அவ்வாறானவர்கள் அளவிற்கதிகமாக மதுவை அருந்திவிட்டு பிரதான வீதிக்கு வந்து குழப்பங்களில் ஈடுபடுவதனால் அவ்வீதியால் செல்லும் பிரயாணிகள் பெரிதும் பாதிக்

கிழக்கு மாகாண விளையாட்டு விழா ஆரம்பம்!

Image
கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 38ஆவது கிழக்கு மாகாண விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை காலை அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த மைதானத்தில் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது. கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்த ஆரம்ப விழாவின் வரவேற்புரையை கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் நிகழ்தினார். இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவின் ஆரம்ப நிகழ்வாக 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வெற்றியீட்டிய வீரர்களுக்கான பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவ்விழாவில் அமைச்சர் பி.தயாரட்ன, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மற்றும் விளைய

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் இஸ்மாயில் மீண்டும் பதவியேற்பு!

Image
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் எஸ்.எம்.முகம்மது இஸ்மாயில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் வைபவம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது உபவேந்தர் இஸ்மாயில் பல்கலைக்கழக மாணவர்களாலும் உத்தியோகத்தர்களாலும் வரவேற்கப்பட்டார் . அதனைத் தொடர்ந்து அவர் தமது கடமையினை வைபரீதியாக ஏற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அத்துடன் விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உபவேந்தர் இஸ்மாயில், பதிவாளர் எச்.அப்துல் சத்தார் ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

கிழக்கு மாகாணத்தில் கல்முனைக்குடியை பிரித்துப்பார்ப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

Image
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் 'ஜெய்க்கா' திட்டத்தின் மூலம் வீதிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இதில் கல்முனைக்குடியை பிரித்துப் பார்ப்பதானது கண்டிக்கத்தக்க விடயமாகும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட வீதிகளின் அபிவிருத்தி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட சில கிராமங்களில் கிழக்கு மாகாண 'ஜெய்க்கா' திட்டத்தின் மூலம் பல வீதிகளுக்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சபை தேர்தல் ஒன்றினை மக்களும் அரசியல்வாதிகளும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் அபிவிருத்திப் பணியில் பிரதேசவாதம் மற்றும் அரசியல் பிரிவினைகளை காட்டியிருப்பது என்பது தெட்டத் தெளிவாகின்றது.  கல்முனைக்குடியில் கடற்கரைப்பள்ளி வீதி, சாஹிபு வீதி, பள்ளி வீதி, காஸிம் வீதி, அலியார் வீதி ஆகிய 5 முக்கிய வீதிகள் நிர்மாணிக்கப்பட வேண்டியுள்ளது.  இருந்தும் குறித்த 5 வீதிகளில்  பள்ளி வீதி மட்டும் வெறும் கண்துடைப்புக்காக ஆரம்பித்

சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நாளை!

Image
நாட்டில் கரையோர மாவட்டங்கள் சிலவற்றில் நாளை  மலை 3 மணியளவில்  சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த ஒத்திகையின் போது சுனாமி எச்சரிக்கை கோபுரத்தில் இருந்து சத்தம் எழுப்பப்படும் எனவும் அதனால் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் மரணம்?

Image
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் பக்கவாதத்தினால் மரணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பக்கவாதத்தினால் அவதிப்பட்டு வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்து விட்டதாக மருத்துவமனை தகவல்களை ஆதாரப்படுத்தி MENA செய்தி ஊடக சேவை தகவல் வெளியிட்டுள்ளது. 84 வயதான முபாரக் கடந்தாண்டுஇ தனது சர்வாதிகார ஆட்சியிலிருந்து பதவியிறக்கப்பட்டார். மக்கள் புரட்சியின் போது நூற்றுக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்ததாக அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து கடந்த மாதம் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாடி எனும் நகரில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குரிய சிகிச்சை பலனின்றி போனதாகவும், அவருடைய இருதயம் துடிப்பது நின்றுவிட்டதாகவும், அவர் உயிர் பிழைத்திருப்பதற்கான சான்றுகள் வெகு அரிதாகவே காணப்படுவதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இச்செய்தியை இராணுவம் மறுத்துள்ளமை க

கல்முனை முதல்வரின் ஆலோசகராக ரகுமான் நியமனம்

Image
கல்முனை மாநகர முதல்வரின் ஆலோசகராக பட்டதாரி ஆசிரியர் எ.ஏ.ரகுமான் இன்று கல்முனை மாநகர பிதா கலாநிதி சிராஸ் மீராசாகிபால் நியமிக்கப் பட்டார் .  இவருக்கான  நியமன கடிதம் இன்று முதல்வர் செயலகத்தில் வைத்து வழங்கப் பட்டது. வீடியோ இணைப்பு 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உத்தியோகபூர்வ இணையதளம் (www.slmc.lk) இன்று (16.06.2012) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

Image

புரநேகும நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கல்முனையில் வீதி புனர்நிர்மாணம்

Image
புரநேகும நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்  ழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஒராபிபாஸா வீதியினை நிர்மாணிப்பதற்கான நிர்மாணப் பணி நேற்று (14.06.2012) ஆரம்பித்துவைக்கப்பட்டது.  ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு தெற்கு புறமாக அமைந்துள்ள மேற்படி வீதி குன்றும் குழியுமாககாணப்பட்டது. இதனால் பாடசாலை மாணவர்கள், பாதசாரிகள் ஆகியோர் பல இன்னல்களுக்கு உள்ளாகினர். இதனை கவனத்திற் கொண்ட கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தில் நிர்மாணிப்பதற்காக முன்மொழிந்தார். அதன் அடிப்படையில்மேற்படி வீதியானது ரூபா 5,708,848.20 செலவில் நிர்மாணிப்பதற்கான நிர்மாணப் பணியினை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஆரம்பித்துவைத்தார். இதன்போது மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி, மாநகர சபை உறுப்பினர்கள், கணக்காளர்,  நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.

மாநகர சபை உறுப்பினர்விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

Image
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாவினாலட மஸ்பாஹ் விளையாட்டு கழகத்திற்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் அண்மையில் அன்பளிப்பு செய்யப்பட்டன. பறக்கத் நலன்புரி அமைப்பின் ஊடாகவே குறித்த விளையாட்டு உபகரணங்கள்  வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீதிவிபத்து கல்முனைக்குடியைச் சேர்ந்தமுஹம்மது றியாஸ்

Image
கல்முனைக்குடியைச் சேர்ந்த சாய்ந்தமருது    பெஷன்   ஹவுஸ் உரிமையாளர்   முஹம்மது   றியாஸ்  ( வயது  29) வாகன  விபத்தில்   சிக்கி   இன்று மாலை அகால   மரணமானார் . நிந்தவூர்   ஒலுவில்   பிரதான   வீதியில்   இவ்   விபத்து   இடம்பெற்றுள்ளது . மோட்டார்   சைக்கிளில்   பயணித்த   இவர்   சிறிய   ரக   லோரி   ஒன்றுடன் மோதுண்டு    படுகாயங்களுக்குள்ளான   நிலையில்   கல்முனை   அஷ்ரப் ஞாபகார்த்த   வைத்திய   சாலையில்   அனுமதிக்க   செல்லும்   வழியிலே மரணமடைந்துள்ளார். கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக்கழகத்தின் உயர் பீட உறுப்பினரான இவர் சிறிது காலம் வெளிநாட்டில் தொழில் புரிந்திருந்தார். இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனை மாநகர சபை நடாத்திய சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விழா

Image
கல்முனை மாநகர   சபை   நடாத்திய சாதனையாளர்களைக்   கௌரவிக்கும் விழாவான  " மாநகரமுத்துக்கள்  - 2012"  நேற்று   வெள்ளிக்கிழமை மாலை 25.05.2012 ல்   சாய்ந்தமருது   கடற்கரை பூங்காவில்   இடம்பெற்றது . மாநகர   முதல்வர்   கலாநிதி   சிராஸ்   மீராசாஹிப்   தலைமையில்   இடம்பெற்ற இவ்விழாவிற்கு   பிரதமஅதிதியாக   நீதிஅமைச்சரும்   ஸ்ரீலங்கா   முஸ்லிம் காங்கிரஸ்   தலைவருமான   ரவுப்   ஹகீம் ,  கௌரவ   அதிதிகளாக   கூட்டுறவு மற்றும்   உள்நாட்டுவர்த்தக   பிரதி   அமைச்சரும்   ஸ்ரீ . மு . கா .  தவிசாளருமான பஷீர்   சேகுதாவூத் ,  திகாமடுல்ல   பாராளுமன்ற   உறுப்பினரும்   ஸ்ரீ . மு . கா . செயலாளருமான   எம் . ரீ . ஹஸன்   அலி ,  திகாமடுல்ல   பாராளுமன்ற உறுப்பினர்   எச் . எம் . எம் . ஹரீஸ் ,  கிழக்குமாகாண   சபை   உறுப்பினர்கள் , மாநகர   சபை   உறுப்பினர்கள்   மற்றும்   மாநகர   சபை   ஆணையாளர் ஜெ . லியாகத்   அலிஆகியோர்   கலந்துசிறப்பித்தனர் . கல்முனை   மாநகர   வரலாற்றில்   முதல்தடவையாக   மாநகர   சபை எல்லைக்குட்பட்ட   பாடசாலைகளின்   சாதனையாளர்களை   பாராட்டும் இவ்விழாவில்   புலமைப்பரிசில்   பரீட்சை –