கல்முனை மாநகர சபை நடாத்திய சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விழா
கல்முனை மாநகர சபை நடாத்திய சாதனையாளர்களைக் கௌரவிக்கும்விழாவான "மாநகரமுத்துக்கள் - 2012" நேற்று வெள்ளிக்கிழமைமாலை25.05.2012ல் சாய்ந்தமருது கடற்கரை பூங்காவில் இடம்பெற்றது.
மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றஇவ்விழாவிற்கு பிரதமஅதிதியாக நீதிஅமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவருமான ரவுப் ஹகீம், கௌரவ அதிதிகளாக கூட்டுறவுமற்றும் உள்நாட்டுவர்த்தக பிரதி அமைச்சரும் ஸ்ரீ.மு.கா. தவிசாளருமானபஷீர் சேகுதாவூத், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ.மு.கா.செயலாளருமான எம்.ரீ.ஹஸன் அலி, திகாமடுல்ல பாராளுமன்றஉறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்குமாகாண சபை உறுப்பினர்கள்,மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபை ஆணையாளர்ஜெ.லியாகத் அலிஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.
கல்முனை மாநகர வரலாற்றில் முதல்தடவையாக மாநகர சபைஎல்லைக்குட்பட்ட பாடசாலைகளின் சாதனையாளர்களை பாராட்டும்இவ்விழாவில் புலமைப்பரிசில் பரீட்சை– 2011ல் சித்தியெய்திய 186மாணவர்கள், க.பொ.த (சா/த) பரீட்சை 2011ல் சிறந்தசித்திகளைப் பெற்ற 24மாணவர்கள், க.பொ.த (உ/த) பரீட்சையில் சிறந்தசித்திபெற்ற 43 மாணவர்கள்ஆகியோருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் ஞாபகச் சின்னம் என்பன வழங்கிகௌரவிக்கப்பட்டனர். இதன்போது 70 வருடஅரசியல் அனுபவம் கொண்டசெனட்டர், அல் -ஹாஜ் S.Z.M. சூர் மௌலானாவை கௌரவிக்கும் முகமாகநீதிஅமைச்சர் ரவுப் ஹக்கீமினால் பொன்னாடை போர்த்தி ஞாபகச் சின்னம்வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்தோடு மாநகர சபை உறுப்பினர்களின்சேவையினை பாராட்டி பொன்னாடை போர்த்தி ஞாபகச் சின்னம்வழங்கப்பட்டது.
இங்கு அனிஸ்டஸ் ஜெயராஜா எழுதிய முதல்வர் கலாநிதி சிராஸ்மீராசாஹிபின் 45 நாள் அரசியல் பயணத்தின் பதிவுகளை கொண்ட"கல்முனை முதல்வர் புதிய சிந்தனை நோக்கிய பயனத்தில்.." என்னும் நூல்வெளியிட்டுவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவிற்கு முன்னதாக கல்முனை தனியார் பஸ் நிலைய கட்டடத்தைஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான கௌரவரவுப் ஹகீம் திறந்துவைத்தார். அத்தோடு மிக நெடுங்காலமாகவழங்கப்படாமல் இருந்துவந்த பஸ் நிலையக் கடைத் தொகுதிக் கடைகள்கேள்விப் பத்திரம் மூலமாக பெற்றுக் கொண்டவர்களுக்கு வழங்கிவைக்கும்நிகழ்வும் இடம்பெற்றது.
Comments
Post a Comment