Posts

மாநகர சபை உறுப்பினரை உத்தியோகத்தர்கள் கௌரவித்தனர்

Image
கல்முனை மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் கடமை புரிந்து மாநகர சபை தேர்தலில் போட்டி இட்டு வெற்றி பெற்ற பறகதுல்லா, இன்று மாநகர சபை முதல்வர் பதவி ஏற்ப்பு வைபவத்துக்கு வருகை தந்த போது அவர் கடமை புரிந்த  மாநகர சபை நிருவாக பிரிவு உத்தியோகத்தர்கள் மாலை அணிவித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கல்முனை மாநகர சபைக்கான மாநகர மேயர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

Image
கடந்த எட்டாந்திகதி நடை பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற  கல்முனை மாநகர சபைக்கான  மாநகர மேயர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். கல்முனை மாநகர ஆணையாளர் எம்.ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்  கல்முனை மக்கள் வங்கி சந்தியில் இருந்து  வரவேற்கப்பட்டு அழைத்து வரப் பட்டார். மும் மத  தலைவர்களின் ஆசியுடன் இடம் பெற்ற இவ்வைபவத்தில்  மாநகர சபைக்கு தெரிவு செய்யப் பட்ட  உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மாநகர சபை பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட முதல்வர் மாநகர சபை உத்தியோகத்தர்களையும் ஊழியர்களையும் சந்தித்த போது அவர்களும் வாழ்த்து  தெரிவித்தனர். பதவி ஏற்றதன் பின்னர் அங்கு நடை பெற்ற கலந்துரையாடலில் கடந்த தேர்தலின் போது நடந்த சம்பவங்களை மறந்து அனைவரும் மக்களுக்கு சேவை என்ற என்னத்தை கொண்டு  செயற்ட்    பட வேண்டும் என முதல்வர் சிராஸ் அங்கு தெரிவித்தார்.  

இசட்.ஏ.எச்.ரஹ்மான்மாநகர சபை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்

Image
கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மருதமுனையை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி இசட்.ஏ.எச்.ரஹ்மான், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து மாநகர சபை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வு நேற்று பொத்துவில் உல்லை கடற்கரை ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் அரசியல் பிரமுகர்கள் பலரும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகர மேயர் பதவி ஏற்ப்பு

Image
கல்முனை மாநகர சபையின் நான்காவது நகர பிதா சிராஸ் மீராசாஹிப் நாளை மாநகர சபை பொறுப்புக்களை கை ஏற்க்கவுள்ளார் . மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில்  இந்த வைபவம் இடம்பெறவுள்ளது.

கல்முனை மாநகர சபைக்கு ஆணையாளர் வருகையும்,செல்கையும்

Image
கல்முனை மாநகர சபையில் ஆணையாளராக இருந்த ஏ.ஜே.எம்.இர்ஷாத் மீண்டும் அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராக  செல்கின்றார். அந்த இடத்திற்கு புதிய ஆணையாளராக சம்மாந்துறை உதவி பிற தேச செயலாளர் ஜே.லியாகத் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.  இதே வேலை விசேட ஆணையாளராக மாநகர சபைக்கு நியமிக்கப் பட்ட கல்முனை பிர தேச செயலாளர் எம்.எம்.நௌபல் இன் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இது தொடர்பான நிகழ்வு நேற்று மாநகர சபை சபா மண்டபத்தில் நடை பெற்றது.ஆணையாளராக இருந்து செல்லும் அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரை பாராட்டி நினைவு கூறும் நிகழ்வு மாநகர சபை நிருவாக உத்தியோகத்தர் அலாவுதீன் தலைமையில் இடம் பெற்றது.

முதல்வருக்கு மண்ணின் மரியாதை

Image
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்காக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கல்முனை மாநகர சபையின் நான்காவது முதல்வராகத் தெரிவாகி நேற்று(16) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் வைத்து சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார். கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இன்று தமது ஊராகிய சாய்ந்தமருதுக்கு வருகைதந்தபோது சாய்ந்தமருது  மக்களால்  வரவேற்பளிக்கப்பட்டது. மாளிகைக்காடு சந்தியிலிருந்து வரவேற்கப்பட்ட புதிய முதல்வர் கலாநிதி சிராஸ், பிரதான வீதி ஊடாக சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் ஜனாதிபதி முன் சத்தியம்

Image
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐ.ம.சு.மு. மற்றும் ஸ்ரீல.மு.கா சார்பில் போட்டியிட்டு அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்றவர்கள் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களாகவும், உப தலைவர்களாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் அலரி மாளிகையில் நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். 

கல்முனை மாநகர சபைக்கு பொதுமக்களின் பங்கேற்பையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல்

Image
கல்முனை மாநகர சபைக்கு பொதுமக்களின் பங்கேற்பையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று சனிக்கிழமை கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் மாநகர சபையின் விசேட ஆணையாளரும் பிரதேச செயலாளருமான எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர சபை கணக்காளர் எல்.ரி.சாலித்தீன், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அலாவுதீன், ஆசிய மன்ற நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலித் உட்பட கல்முனை மாநகர பிரதேசத்தில் உள்ள வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் நலன் விரும்பிகள் பலரும் கலந்துகொண்டனர். இதில் அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான பிரேரணைகளையும் கருத்துகளையும் சமர்ப்பிக்குமாறு மேற்படி பிரமுகர்களிடம் கோரப்பட்டது. அத்துடன் மாநகர சபைக்கான வரி அறவீடுகள் மற்றும் பிரதேசங்களின் குறைபாடுகள், தேவைகள் தொடர்பாகவும் அங்கு ஆராயப்பட்டது.

தேசிய வெள்ளை பிரம்பு தினம் இன்று கல்முனையில் கொண்டாடப் பட்டது.

Image
தேசிய வெள்ளை பிரம்பு தினம் இன்று கல்முனையில் கொண்டாடப் பட்டது. கல்முனை,அக்கரைபத்து ,மட்டக் களப்பு லயன்ஸ் கழகங்கள் இணைந்து மட்டக்களப்பு ''தரிசனம்'' விழிப்புலனற்றோர்  பாடசாலையுடன் நடத்தப்பட்ட இந்நிகழ்வு கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை கிளனி மண்டபத்தில் நடைபெற்றது .கல்முனை இராம கிருஸ்ணமகா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த விழிப்புணர்வு  ஊர்வலம் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் முடிவடைந்தது .கல்முனை நகர லயன்ஸ் கழக தலைவர் K.பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்ற இவ்விழிப்புணர்வு வைபவத்தில் பிரதம அதிதியாக லயன் E.W.A.ஹரிசந்திரா கலந்து கொண்டார் . பிரதேச செயலாளர்களான M.M.நௌபல் கழக அங்கத்தவர்கள் என இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர் . K.லவநாதன், M. கோபாலரத்தினம் ஆகியோரும் மற்றும் பிரதேச பாடசாலை அதிபர்கள் ,லயன்ஸ்  இங்கு விழிப்புலனற்ற மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது .

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இரங்கல் கூட்டம்

Image
அம்பாரை மாவட்டத்தில் ஊடகவியலாளர்களாகப் பணியாற்றி அண்மையில் அமரத்துவமடைந்த கே.என்.தர்மலிங்கம்,  மர்ஹும் ஏ.எம்.அலிகான் ஆகியோரை நினைவு கூறும் இரங்கல் கூட்டம் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது. அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத் தலைவர் கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இவ் இரங்கற் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ், தென்கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோர் முதன்மை அதிதிகளாக கலந்து கொண்டனர். வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகன், சிரேஷ்ட உதவி ஆசிரியர் கே.சிவராஜா, விற்பனை மேம்பாட்டு முகாமையாளர் கே.சென்தில்நாதன், தினக்குரல் பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம், ஆசிரியர் பீட சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம்.அமீன், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், ஓய்வு பெற்ற பிரதிக்

முன்னாள் அமைச்சர் மன்சூர் கல்முனையில் கௌரவிப்பு

Image
சட்டத்துறையில் ஐம்பது  வருடம் பூர்த்தி செய்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூருக்கு கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை நீதி மன்றத்தில் சனிக்கிழமை நடை பெற்றது இவ்வைபவத்திற்கு வருகை தந்த அமைச்சர் ரவுப் ஹக்கீம்,உயர் நீதி மன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அமீர் இஸ்மாயில் ஆகியோர் உள்ளிட்ட அதிதிகள் வர்வேர்கப்படுவத்தையும் முன்னாள் அமைச்சர் மன்சூர் கௌரவிக்கப் படுவதையும் காணலாம்.

கல்முனையில் உலக உள நல சுகாதார தினம்

Image
கல்முனை பிராந்திய சுகாதார  சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஏற்பாடு செய்த "சுகமான உள்ளங்களுக்கான உளச் சுகாதாரத்திற்கு முதலீடு செய்வோம்" எனும் கருப் பொருளை கொண்ட உலக உள நல  சுகாதார தினம் நேற்று கல்முனையில் அனுஷ்டிக்கப் பட்டது. கல்முனை பிராந்திய சுகாதார் சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.எம்.இப்ராலேப்பே தலைமையில் நடை பெற்ற இவ்வைபவத்தில் வைத்திய அதிகாரிகளும்,கல்முனை பிராந்திய சுகாதார் சேவைகள் பணிப்பாளர் பணிமனை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். கல்முனை நகரில் இடம் பெற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர். இதில் உலக மேம்பாட்டுக்காக  அணி திரள்வோம்,சிறந்த உள  நலத்தை பேணுவோம்,உள நோயாளர்களுக்கு ஆதரவாக இருப்போம், மன நோயாளர்களும் மனிதர்களே என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி அதிகாரிகளும் ,மாணவர்களும் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். உலக சுகாதார நிறுவனத்தால் அன்பளிப்பு செயப்பட்ட பதின்மூன்று மோட்டார் சைகல்கள் கல்முனை பிராந்திய சுகாதார  சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட பதின் மூன்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பண

சொத்து விபரத்தை வெளியிடுவதற்கான தினம் பிற்போடப்பட்டுள்ளது

Image
அண்மையில் தெரிவான உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள், தமது சொத்து விபரங்களை வெளியிடுவதற்கான காலவரை நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் இவர்கள் தமது சொத்து குறித்த விபரங்களை வெளியிட வேண்டும் என தேர்தல்கள் செயலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார். முன்னர், தேர்தல்கள் செயலகம், புதிதாக தெரிவான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை இன்று தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இதேவேளை, முக்கிய அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கையில், இந்த விடயம் குறித்து சகல உறுப்பினர்களுக்கும் தாம் அறிவித்துள்ளதாக தெரிவித்தன

பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த மகோத்சவ பெருவிழா

Image
கல்முனை பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த மகோத்சவ பெருவிழாவின் பத்தாம் நாள் நிகழ்வாக பஞ்ச பாண்டவர்களின் தீமிதிப்பு வைபவம் மிக சிறப்பாக நேற்று நடை பெற்று முடிந்தது. ஈழமணி திருநாட்டின் கிழக்கு இலங்கையின் வடக்கே வீற்றிருந்து அருள் பாலிக்கும் அன்னை பராசக்தியின் 5ம் வேதமாகிய மகா பாரதத்தின் அடிப்படையாக கொண்டதும் ஸரித்திரபுகழ் பெற்றதுமான ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து ''தாதன்'' எனும் மா முனிவரால் கொண்டுவரப்பட்டு இப்பதியிலே ஸ்தாபிக்கப்பட்டுள்ள பஞ்ச பாண்டவரின் சரித்திரத்தால் பாண்டிருப்பு என்னும் பேர் பெற்று விளங்கும் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய  தீ மிதிப்பு வைபவம் பல்லாயிர கணக்கான மக்கள் புடை சூழ  மிக சிறப்பாக நடை பெற்று முடிந்தன. இன்றைய இந்த தேசிய நிகழ்வில் அம்பாறை அரச அதிபரின் பிரதிநிதியாக கல்முனை தமிழ் பிரிவு பிர தேச செயலாளர் கே.லாவநாதன் பங்கேற்று நிகழ்வுகளை பார்வை இட்டார்.