அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இரங்கல் கூட்டம்


அம்பாரை மாவட்டத்தில் ஊடகவியலாளர்களாகப் பணியாற்றி அண்மையில் அமரத்துவமடைந்த கே.என்.தர்மலிங்கம்,  மர்ஹும் ஏ.எம்.அலிகான் ஆகியோரை நினைவு கூறும் இரங்கல் கூட்டம் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது. அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத் தலைவர் கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இவ் இரங்கற் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ், தென்கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோர் முதன்மை அதிதிகளாக கலந்து கொண்டனர்.


வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகன், சிரேஷ்ட உதவி ஆசிரியர் கே.சிவராஜா, விற்பனை மேம்பாட்டு முகாமையாளர் கே.சென்தில்நாதன், தினக்குரல் பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம், ஆசிரியர் பீட சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம்.அமீன், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் கவிஞர்.மு.சடாட்சரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.பி.சிவப்பிரகாசம் உட்பட கவிஞர்கள், எழுத்தாளர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



எந்தவொரு ஊடக நிறுவனத்தினதும் உயர்விற்கு காரணமானவர்களாக பிராந்திய ஊடகவியலாளர்கள் செயற்படுகின்றனர். எமது சமூகத்திற்காக பேனாவுடன் போராடிய இருவர் எம்மை விட்டு பிரிந்துள்ளனர். இவர்களின் மறைவு சமூகத்திற்கு மட்டுமல்ல அவர்கள் பணியாற்றிய ஊடக நிறுவனங்களிற்கும் பேரிழப்பாகும். அம்பாரை மாவட்டத்திலிருந்து அனுப்பப்படும் செய்திகளை மீண்டும் படித்து திருத்த வேண்டிய தேவைப்பாடு பிரதம ஆசிரியர்களுக்கு மிகக் குறைவு. அவ்வாறு சிறந்த, திறமையுள்ள ஊடகவியலாளர்கள் அம்பாரை மாவட்டத்தில் இருக்கின்றார்கள். அவ்வாறான இருவரை இம்மாவட்டம் இழந்திருப்பது வேதனையான விடயம் என இங்கு உரையாற்றிய பத்திரிகை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்