கல்முனை மாநகர சபைக்கு ஆணையாளர் வருகையும்,செல்கையும்
கல்முனை மாநகர சபையில் ஆணையாளராக இருந்த ஏ.ஜே.எம்.இர்ஷாத் மீண்டும் அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராக செல்கின்றார். அந்த இடத்திற்கு புதிய ஆணையாளராக சம்மாந்துறை உதவி பிற தேச செயலாளர் ஜே.லியாகத் அலி நியமிக்கப்பட்டுள்ளார். இதே வேலை விசேட ஆணையாளராக மாநகர சபைக்கு நியமிக்கப் பட்ட கல்முனை பிர தேச செயலாளர் எம்.எம்.நௌபல் இன் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
இது தொடர்பான நிகழ்வு நேற்று மாநகர சபை சபா மண்டபத்தில் நடை பெற்றது.ஆணையாளராக இருந்து செல்லும் அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரை பாராட்டி நினைவு கூறும் நிகழ்வு மாநகர சபை நிருவாக உத்தியோகத்தர் அலாவுதீன் தலைமையில் இடம் பெற்றது.
Comments
Post a Comment