கல்முனையில் உலக உள நல சுகாதார தினம்



கல்முனை பிராந்திய சுகாதார  சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஏற்பாடு செய்த "சுகமான உள்ளங்களுக்கான உளச் சுகாதாரத்திற்கு முதலீடு செய்வோம்" எனும் கருப் பொருளை கொண்ட உலக உள நல  சுகாதார தினம் நேற்று கல்முனையில் அனுஷ்டிக்கப் பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார் சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.எம்.இப்ராலேப்பே தலைமையில் நடை பெற்ற இவ்வைபவத்தில் வைத்திய அதிகாரிகளும்,கல்முனை பிராந்திய சுகாதார் சேவைகள் பணிப்பாளர் பணிமனை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

கல்முனை நகரில் இடம் பெற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர். இதில் உலக மேம்பாட்டுக்காக  அணி திரள்வோம்,சிறந்த உள  நலத்தை பேணுவோம்,உள நோயாளர்களுக்கு ஆதரவாக இருப்போம்,


மன நோயாளர்களும் மனிதர்களே என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி அதிகாரிகளும் ,மாணவர்களும் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

உலக சுகாதார நிறுவனத்தால் அன்பளிப்பு செயப்பட்ட பதின்மூன்று மோட்டார் சைகல்கள் கல்முனை பிராந்திய சுகாதார  சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட பதின் மூன்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பணியாற்றும் உளநல சுகாதார தொண்டர்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்