முதல்வருக்கு மண்ணின் மரியாதை




நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்காக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கல்முனை மாநகர சபையின் நான்காவது முதல்வராகத் தெரிவாகி நேற்று(16) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் வைத்து சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார்.
கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இன்று தமது ஊராகிய சாய்ந்தமருதுக்கு வருகைதந்தபோது சாய்ந்தமருது  மக்களால்  வரவேற்பளிக்கப்பட்டது.


மாளிகைக்காடு சந்தியிலிருந்து வரவேற்கப்பட்ட புதிய முதல்வர் கலாநிதி சிராஸ், பிரதான வீதி ஊடாக சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்