தேசிய வெள்ளை பிரம்பு தினம் இன்று கல்முனையில் கொண்டாடப் பட்டது.
தேசிய வெள்ளை பிரம்பு தினம் இன்று கல்முனையில் கொண்டாடப் பட்டது. கல்முனை,அக்கரைபத்து ,மட்டக் களப்பு லயன்ஸ் கழகங்கள் இணைந்து மட்டக்களப்பு ''தரிசனம்'' விழிப்புலனற்றோர் பாடசாலையுடன் நடத்தப்பட்ட இந்நிகழ்வு கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை கிளனி மண்டபத்தில் நடைபெற்றது .கல்முனை இராம கிருஸ்ணமகா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த விழிப்புணர்வு ஊர்வலம் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் முடிவடைந்தது .கல்முனை நகர லயன்ஸ் கழக தலைவர் K.பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்ற இவ்விழிப்புணர்வு வைபவத்தில் பிரதம அதிதியாக லயன் E.W.A.ஹரிசந்திரா கலந்து கொண்டார் . பிரதேச செயலாளர்களான M.M.நௌபல்
கழக அங்கத்தவர்கள் என இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர் .
இங்கு விழிப்புலனற்ற மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது .
Comments
Post a Comment