கல்முனை மாநகர சபைக்கான மாநகர மேயர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
கடந்த எட்டாந்திகதி நடை பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கல்முனை மாநகர சபைக்கான மாநகர மேயர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
கல்முனை மாநகர ஆணையாளர் எம்.ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கல்முனை மக்கள் வங்கி சந்தியில் இருந்து வரவேற்கப்பட்டு அழைத்து வரப் பட்டார்.
மும் மத தலைவர்களின் ஆசியுடன் இடம் பெற்ற இவ்வைபவத்தில் மாநகர சபைக்கு தெரிவு செய்யப் பட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாநகர சபை பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட முதல்வர் மாநகர சபை உத்தியோகத்தர்களையும் ஊழியர்களையும் சந்தித்த போது அவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
பதவி ஏற்றதன் பின்னர் அங்கு நடை பெற்ற கலந்துரையாடலில் கடந்த தேர்தலின் போது நடந்த சம்பவங்களை மறந்து அனைவரும் மக்களுக்கு சேவை என்ற என்னத்தை கொண்டு செயற்ட் பட வேண்டும் என முதல்வர் சிராஸ் அங்கு தெரிவித்தார்.
Comments
Post a Comment