பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த மகோத்சவ பெருவிழா

கல்முனை பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த மகோத்சவ பெருவிழாவின் பத்தாம் நாள் நிகழ்வாக பஞ்ச பாண்டவர்களின் தீமிதிப்பு வைபவம் மிக சிறப்பாக நேற்று நடை பெற்று முடிந்தது.
ஈழமணி திருநாட்டின் கிழக்கு இலங்கையின் வடக்கே வீற்றிருந்து அருள் பாலிக்கும் அன்னை பராசக்தியின் 5ம் வேதமாகிய மகா பாரதத்தின் அடிப்படையாக கொண்டதும் ஸரித்திரபுகழ் பெற்றதுமான ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து ''தாதன்'' எனும் மா முனிவரால் கொண்டுவரப்பட்டு இப்பதியிலே ஸ்தாபிக்கப்பட்டுள்ள பஞ்ச பாண்டவரின் சரித்திரத்தால் பாண்டிருப்பு என்னும் பேர் பெற்று விளங்கும் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய  தீ மிதிப்பு வைபவம் பல்லாயிர கணக்கான மக்கள் புடை சூழ  மிக சிறப்பாக நடை பெற்று முடிந்தன.






இன்றைய இந்த தேசிய நிகழ்வில் அம்பாறை அரச அதிபரின் பிரதிநிதியாக கல்முனை தமிழ் பிரிவு பிர தேச செயலாளர் கே.லாவநாதன் பங்கேற்று நிகழ்வுகளை பார்வை இட்டார்.

Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்