கல்முனை மாநகர சபைக்கு பொதுமக்களின் பங்கேற்பையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல்
கல்முனை மாநகர சபைக்கு பொதுமக்களின் பங்கேற்பையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று சனிக்கிழமை கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் மாநகர சபையின் விசேட ஆணையாளரும் பிரதேச செயலாளருமான எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர சபை கணக்காளர் எல்.ரி.சாலித்தீன், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அலாவுதீன், ஆசிய மன்ற நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலித் உட்பட கல்முனை மாநகர பிரதேசத்தில் உள்ள வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் நலன் விரும்பிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment