Posts

நற்பிட்டிமுனை அல் -அக்ஸா பாலர் பாட சாலை கலை விழா -2012

Image
நற்பிட்டிமுனை அல் -அக்ஸா பாலர்  பாட சாலை  வருடாந்த கலை விழா கடந்த 25.11.2012ஆந்  திகதி நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் ஆசிரியைகளான ஐ.றியாசா ,ஐ.றிசானா  ஆகியோர் தலைமையில் நடை பெற்றது . இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எல்.சாலிதீன்  ஆசிரியர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கலை நிகழ்வுகளில்  பங்கு பற்றிய மாணவர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைத்தார் . வீ.எம்.சம்சம்  அதிபர் ,ஆசிரியர்களான வை.ஏ.கே.தாசீம் ,ஏ.ஜி.எம்.றிஷாத் ,ஊடகவியலாளர் யு.எம்.இஸ்ஹாக்  உள்ளிட்ட பலர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர் .

கிழக்கு மாகாண அமைச்சுக்களில் உள்ள திணைக்களங்களுக்கு 15 மாகாண சபை உறுப்பினர்களை நியமனம் செய்தல்அமைச்சரவை தீர்மானம்!

Image
-முஹமது  இஸ்ஹாக் - கிழக்கு மாகாண சபை அமைச்சரவைக் கூட்டம் 22.11.2012 ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் தலைமையில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை பேச்சாளரும் வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை இன்று தனது அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் வெளியிட்டார். அத்தீர்மானங்களின் விபரங்கள் பின்வருமாறு 1.புதன்கிழமை தினத்தில் விழாக்களை இரத்துச் செய்தல் கிழக்கு மாகாணத்தில் தூர இடங்களிலிருந்து திருகோணமலை நகரில் உள்ள திணைக்கள தலைவர்களை சந்திக்க வரும் பொது மக்களின் நன்மை கருதி புதன்கிழமைகளில் விழாக்களை நடாத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் புதன்கிழமை பொது மக்களை சந்திக்கும் தினமாக பிரகடனப்படுத்துமாறும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்களினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தொடர்பாக அமைச்சரவை வாரியம் அதற்கான அங்கீகாரத்தினை வழங்கியது. 2.கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட கொடுப்பனவு  கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்காக மாதாந்த கொடுப்பனவு வ

கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசலில்ஜனாதிபதியின்இரண்டாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டுதுஆ பிரார்த்தனை

Image
ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் இரண்டாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு,  கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை மற்றும் விசேட சொற்பொழிவும்; நேற்று  திங்கட்கிழமை இடம்பெற்றது. கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புக்களின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசலின் பேஷ் இமாம் மௌலவி ஏ.சமது துஆ பிரார்த்தனையை நடத்தினார்.   இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் கல்முனைத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளரும், மாநகரசபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ், மாநகரசபை உறுப்பினர் ஏ.பறக்கதுல்லா உட்பட சமூக அமைப்புக்களின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.  இதே வேளை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியிலும் ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் இரண்டாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. 

இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்!

Image
இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் நாளை 22ம் திகதி வியாழனன்று சீனாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. இந்த செயற்கைக் கோள் சீனாவின் சீசாங் ஏவுதளத்திலிருந்து நாளை பிற்பகல் 3.30 மணியளவில் விண்ணில் ஏவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்- அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னர் வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளை கட்டுப்படுத்துவதற்கான நிலையம் கண்டியிலுள்ள பல்லேகலவில் அமைக்கப்படவுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டதும்- உலகில் சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வைத்திருக்கும் 45வது நாடாக இலங்கை வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளது. தெற்காசியாவில் இந்தியா- பாகிஸ்தானுக்கு அடுத்ததாக- சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை கொண்டுள்ள மூன்றாவது நாடு என்ற பெருமையையும் இலங்கை பெறும்.

13வது திருத்தச் சட்டத்திற்குப் பதிலாக உருவாகும் 19ம் திருத்தச் சட்டம்

  By: M.I.M.S. Anwar gpujk ePjpaurH rpwhzp gz;lhuehaf;fhitg; gjtp ,wf;Ftjw;fhd cj;juT gj;jpuk; ghuhSkd;wj;jpy; rku;g;gpf;fg;gl;L ,f;Fw;wg; gj;jpuj;ij tprhupg;gjw;fhf 9 ghuhSkd;w cWg;gpdHfisf; nfhz;l njupTf; FO mikf;fg; gl;Lf; nfhz;bUf;Fk; ,e;epiyapYk; ntypf;filr; rpiwr;rhiyapy; fyfk; Vw;gLj;jg;gl;L 27 NgH nfhy;yg;gl;Lk; 70w;Fk; mjpfkhNdhH fhaKw;WKs;s gpd;dzpapYk; muR 13tJ jpUj;jr; rl;lj;jpw;Fg; gjpyhf 19tJ jpUj;jr; rl;lnkhd;iwg; ghuhSkd;wj;jpy; rkHg;gpf;ftpUg;gjhf vjpHf;fl;rpj; jiytH uzpy; tpf;fpukrpq;f Fw;wk; Rkj;jpAs;shH. jkpo; - rpq;fs ,df;fytuk; cr;rf; fl;lj;jpypUe;jNghJ ,t;tpU jug;gpdUf;Fkpilapyhd Kuz;ghl;ilj; jPHg;gjw;fhd xU mbg;gilj; jPHkhdkhfNt 13tJ jpUj;jr; rl;lk; ,e;jpahthy; ,yq;iff;F mwpKfg; gLj;jg;gl;lJ. md;iwa epiyapy; tpUk;gpNah tpUk;ghkNyh ,ijNaw;W rl;l%ykhf;f Ntz;ba flg;ghL ,yq;if murpw;fpUe;jJ vd;gJk; ,dthj fLk;Nghf;Fr; rpq;fstHfs; kj;jpapy; ,jw;F vjpHg;G ,Ue;jJ vd;gJk; ahtUk; mwpe;j cz;ik. ,dthjf; fl;rpfSf;Fk; mf;fl;rpfis cs;slf;fpa murpw;Fk; jq;fSila Fwp

செல்வாக்கு சரிந்து வரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Image
By: M.I.M.S. Anwar இலங்கையில் கடந்த காலங்களில் அதாவது 1983ம் ஆண்டில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் பின்னர் அரச-தமிழ் தரப்பினர்களுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சு வார்த்தைகளில் இந்நாட்டு முஸ்லிம்களைப் பிரதிநிதிப்படுத்தவோ அல்லது அவர்களின் குறை நிறைகளை அவ்வாறான பேச்சு வார்த்தைகளில் முன் வைக்கவோ அவர்களுக்கென ஒரு கட்சி இல்லாதபோதுதான் ஒரு முஸ்லிம் கட்சியின் அவசியம் உணரப் பட்டது. இதைத் தொடர்ந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருப்பெற்று இங்குள்ள முஸ்லிம்கள் மத்தியில் அதிக செல்வாக்கையும் பெற்றது. “பிழையான வழியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செல்லுமாயின் என்னையும் அழித்து எனது கட்சியையும் அழித்துவிடு இறைவா” என்று கட்சியின் மறைந்த தலைவர் மர்ஹ_ம் அ~;ரப் அவர்கள் கூறியதை தலைவரின் பாசறையில் வளர்ந்ததாகக் கூறிக் கொண்டீருக்கும் ஒருவரிடம் சொன்ன போது அவர் நான் தெரிவித்த அக்கூற்றுக்கு ஒரு சிறு மாற்றம் செய்து “எங்களையும் அழித்து இக்கட்சியையும் அழித்து விடு இறைவா” என்றுதான் தலைவர் கூறியதாகத் தெரிவித்தார். எது எவ்வாறிருப்பினும் இக்கட்சியின் ஸ்தாபகர் மர்ஹ_ம் ஆ.ர்.ஆ. அ~;ரப் அவர்கள் மரித்ததன் பின்னர்

Update Palestinians killed and wounded - day 7 (Israel war on Gaza)

Image

வடக்கு ,கிழக்கு மக்களுக்கு ஒரு மணி நேரத்துக்குள் பிறப்பு ,இறப்பு சான்றிதழ்கள்!

Image
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சகல பிரதேச செயலகங்களில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை ஒரு மணித்தியாலத்திற்குள் வழங்கும் நாடளாவிய வேலைத் திட்டம் 2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என பொது நிருவாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டப்ளியு. டீ. ஜே. செனவிரத்ன தெரிவித்தார். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகங்களின் தரவுகளை கணனிமயப்படுத்தும் வலையமைப்பு வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். வட மாகாணத்தில் கணனி வலையமைப்புக்கு உட்படுத்தும் பணி பூர்த்தியடைந்துள்ளதாகவும், அதன்படி தற்போது நாடளாவிய ரீதியில் 250 இற்கும் மேற்பட்ட பிரதேச செயலகங்களில் இப்பணி பூர்த்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். கொழும்பு ,களுத்தறை போன்ற மாவட்டங்களில் ஐந்து நிமிடங்களிலேயே பிறப்பு இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டம் ஓரிரு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டன . இம்மாவட்டத்தில் சகல பிரதேச செயலகங்களிலும் இப்பணி பூர்த்தியடைந்துள்ளமை அரசாங்கத்திற்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும் எனவும் அமைச்சர

100 000வாசகர்களுக்கு வாழ்த்துக்கள்

Image
கல்முனை நியூஸ்  இணையதளத்தை 100000 வாசகர்கள் இன்றுடன் பார்வையிட்டுள்ளனர்  அவர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுக்கள் 

ஜனாதிபதி ஊடகப் பேச்சாளராக மொஹான் சமரநாயக்க!

Image
ஜனாதிபதி ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட ஊடகவியலாளரான மொஹான் சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக மொஹான் சமரநாயக்க கடமையாற்றும் இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதார சிறப்புப் பட்டம் பெற்றுள்ளார். இவர் இலங்க ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக பதவிவகுக்கும் அதேவேளை- ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளராகவும் மொஹான் சமரநாயக்கா கடமையாற்றுவார். ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளராக இதுவரை காலமும் கடமையாற்றிய பந்துல ஜயசேகர அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர கொன்ஸியூலர் ஜெனரலாக நியமனம் பெற்று இன்று அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன்- ஜனாதிபதியின் சர்வதேச ஊடகப் பிரிவின் பணிப்பாளராக அனுராதா ஹேரத் நியமனம் பெற்றுள்ளார்

கல்முனை மஹ்மூத் பெண்கள் கல்லூரிக்கு புதிய அதிபராக யு.எல்.அப்துல் முபாரக்நியமனம்

Image
 கல்முனை நகரில் பிரபல்யமான பெண்கள் பாடசாலையான கல்முனை மஹ்மூத் பெண்கள் கல்லூ ரிக்கு பொருத்தமான அதிபர் ஒருவரை விண்ணப்பம் கோரி நேர்முகப்பரீட்சையின் மூலம் தெரிவு செய்து நியமன ம்   செய்யுமாறு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைவாக கடந்த 01.11.2012இல் கிழக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டு, காணி, காணி அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சில் நேர்முகப்பரீட்சையொன்று நடை பெற்றது. இதில் இப்பிரதேச அதிபர்களும் கல்வி அதிகாரி ஒருவரும் கலந்து கொண்டனர். இந்த நேர்முகப் பரீட்சைக்கு மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் தற்போது அதிபராக கடமையாற்றும் இலங்கை அதிபர்கள் சேவை தரம் -1 யைச் சேர்ந்த அல்ஹாஜ் யு.எல்.அப்துல் முபாரக் என்பவர்தெரிவு செய்யப்பட்டு கல்முனை மஹ்மூத் பெண்கள் கல்லூரிக்கு புதிய அதிபராக மாகாணக் கல்வி அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கல்முனை மஹ்மூத் பெண்கள் கல்லூரிக்கு நிரந்தர அதிபர் ஒருவர் இல்லையென்ற குறை தீர்க்கப்பட்டுள்ளது. ஆயினும் அல்ஹாஜ் யு.எல்.அப்துல் முபாரக் அவர்கள் தற்போது கடமையாற்றும் மட் காத்தான்குடி மத்திய கல்லூரியின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத

கல்முனை வர்த்தகர் மின்சாரம் தாக்கி மரணம்

Image
கல்முனை வர்த்தகர் மின்சாரம் தாக்கி மரணமான  சம்பவம் இன்று கல்முனையில் இடம் பெற்றுள்ளது .சம்பவத்தில் மரணமானவர் நட்பிட்டிமுனையை சேர்ந்த 62  வயதுடைய முகம்மது இஸ்மாயில் முகம்மது ஹனிபா என்பவராகும் . கல்முனையில் தெருவோர  புடவை வியாபாரம் செய்யும்  நபரான இவர் சம்பவம் நடை பெற்ற இன்று வர்த்தகத்தை முடித்து விட்டு புடவை பொதியை வாடகை அறையில் வைக்க சென்ற போதே இந்த விபரீதம் ஏற்ப்பட்டு மரணமாகி உள்ளார் . சம்பவம் தொடர்பாக கல்முனை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .கல்முனை நீதிவான் நீதிபதியின் உத்தரவுக்கமைய சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது 

அரச ஊழியர்களுக்கு அதிகரித்த கொடுப்பனவு ஜனவரியில்

வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 750 ரூபா 2013 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்க ஊழி யர்களுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் கொடுப்பனவுகள் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ளன. அரசாங்க ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஆகக் குறைந்தது 1500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. வரவுசெலவுத் திட்டத்தை நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற் றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதனை அறிவித்தார். அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் ஜனவரி மாதத்திலிருந்து மாதமொன்றுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக 750 ரூபா வழங்கப்படவிருப்பதுடன், மீதித்தொகையானது அடிப்படைச் சம்பளத்தின் 5 வீதமாக அதாவது, ஆகக் குறைந்தது 750 ரூபாவாக, 2500 ரூபாவுக்கு அதிகரிக்காத வகையில் விசேட கொடுப்பனவாக வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார். அதிகரிப்புகளினால் ஏற்படும் பணவீக்க அழுத்தத்தினைக் கவனத்திற்குகொண்டு முன்மொழியப்பட்ட 5 சதவீத அதிகரிப்பில் 50 சதவீதத்தினை 2013ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து, மீதியை செப்டெம்பர் மாதத்திலிருந்து வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து பதவிநிலை அலுவலர்களும் 50 சதவ

நற்பிட்டிமுனையில் மாடுகள் பல திடீர் இறப்பு

Image
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனைக் கிராமத்திலுள்ள அஷ்ரப் விளையாட்டு மைதானத்துக் கருகில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் இன்று காலை திடீரென இறந்துள்ளன. பல மாடுகள் இவ்வாறு மர்மமான முறையில் திடீரென இறந்தமையானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பொலிசாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விசாரணைகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர். குறித்த இடத்தில்  உணவில்  நச்சுத் தன்மை இருந்திருக்கலாம் எனவும் அவற்றை உட்கொண்ட மாடுகளே உயிரிழந்திருக்கலாம் எனவும் மாநகர சபை  வைத்திய அதிகாரி  டாக்டர்  சுல்பி தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத்திட்ட ஆலோசனைகள், வருமான அதிகரிப்பு குறித்த கலந்துரையாடல்

Image
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரனையுடனும், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும் ஆசிய மன்றம் நடைமுறைப் படுத்திவரும் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் – 2013 தொடர்பிலான ஆலோசனைகள் மற்றும் வருமான அதிகரிப்பு குறித்த விஷேட கலந்துரையாடல் தற்பொழுது (8.00pm) சாய்ந்தமருது   பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சிதிட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீதின் நெறிப்படுத்தலில் கௌரவ முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடை பெற்றது

சமூர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி

Image
கல்முனைப் பிரதேச சமூர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் மற்றும், முதியோர் தினத்தையொட்டி கல்முனைக்குடி, மற்றும் மருதமுனை-நற்பிட்டிமுனை சமுர்த்தி வலையங்களுக்கிடையிலான மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி 2012.10.12ம் திகதி நற்பிட்டிமுனை அஷ்ரப் சதுக்கத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக கல்முனை பிரதே செயலாளர் திரு:எம்.எம்.நௌபல், கௌரவ அதிதியாக சமுர்த்தி முகாமைத்தவப் பணிப்பாளர் திரு: ஏ.ஆர்.எம். சாலி, விசேட அதிதியாக சமுர்த்தி வலய முகாமையாளர் திருமதி: எஸ்.எஸ். பரீதா ஆகியோர் கலந்து கொண்டனர். இம் மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியில் கல்முனைக்குடி சமுர்தி வலயம் நற்பிட்டிமுனை-மருதமுனை சமுர்த்திவலயத்தை தோற்க்கடித்து சம்பியன் கிண்ணத்தைத் தட்டிச்சென்றது இப் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றிய 31 சிறுவர் கழகங்களுக்குமான விளையாட்டு உபகரணங்களையும் பிரதேச செயலாளர் வழங்கிவைத்தார்.

27ஆம் திகதியே ஹஜ் பெருநாள்

Image
இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் இன்று செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தது. ஹிஜ்ரி 1433 புனித துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை இன்று செவ்வாய்க்கிழமை இரவு நாட்டின் எந்தவொரு பாகத்திலும் தென்படவில்லை.  இதற்கமையவே 27ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்கள் பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புனித துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஹமீதிய்யா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை பிரதிநிதிகள்இ கொழும்பு பள்ளிவாசல் நிர்வாக சபையின் பிரதிநிதிகள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள் மற்றும் ஷரீயா கவுன்ஸில் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். புனித ஹஜ் பெருநாள் எதிர்வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என்று நாட்காட்டிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பிரின்ஸ் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டு​ப் போட்டி

Image
நற்பிட்டிமுனை பிரின்ஸ் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று (30.09.2012) நற்பிட்டிமுனை அஷ்ரப் ஞபகார்த்த விளையாட்டு  மைதானத்தில் பாடசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் முஹமட் றியாஸ் தலைமையில் நடைபெற்றது. ஒலிம்பிக் தீபமேற்றி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் 25மீற்றர் ஓட்டம்,முயல் ஓட்டம், தவளை ஓட்டம், தாறா ஓட்டம், சமநிலை ஓட்டம், போத்தலில் தன்னீர் நிரப்புதல்,கரன்டியில் தேசிக்காய் ஏந்திய ஓட்டம் போன்ற பல்வேறுபட்ட போட்டிநிகழ்ச்சிகள் இடம் பெற்றன.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கௌரவ அதிதியாக முன்னாள் அட்டாலைச்சேனை பிரதேச சபை தவிசாளரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.நசீர், அதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார், பெற்றோர் மற்றும் பிரேதேசவாசிகள் கலந்து சிறப்பித்தனர்.

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது இலங்கை

Image
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் அரையிறுதிப் போட்டில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் மஹேலவை தவிர வேறு எவரும் பெரிதாக பிரகாசிக்கவில்லை. இலங்கை அணி சார்பில் மஹேல ஜயவர்த்தன 42, திலகரத்ன தில்ஷான் 35, குமார் சங்கக்கார 18, ஜீவன் மென்டிஸ் 15, திஸர பெரேரா 11, ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 10 என ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் அஜ்மால், அப்ரிதி, ஹபீஸ், உமர் குல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை வீழ்த்தினார்.

இன்று கிழக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு!

Image
கிழக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு இன்று காலை திருகோணமலையிலுள்ள மாகாண சபை மகாநாட்டு மண்டபத்தில் சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றது. சபையின் செயலாளரினால் சபையில் ஆளுநரின் சபை கூட்டுவதற்கான கடிதம் வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சபையில் தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான தெரிவு கோரப்பட்டதையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் சபை உறுப்பினர் ஆரியவதி கலப்பதியின் பெயரை முன்மொழிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினரும் அக்கட்சியின் சபைக் குழுத் தலைவருமான எம்.எம். ஜெமீல் வழிமொழிய சபை ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து பிரதித் தவிசாளர் தெரிவு செயலாளரினால் அறிவிக்கப்பட்ட போது மாகாணசபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரான எம்.எஸ்.சுபைரின் பெயர் முன்மொழியப்பட்டது. இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வழிமொழிய சபை ஏகமானதாக ஏற்றுக்கொண்டது. இதேவேளை கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெறுவதையொட்டி 15 நிமிடம் சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் சபை கூடியது.

கல்முனை பிரதேச கலாசார விழா; 12 பிரமுகர்களுக்கு கௌரவம்!

Image
கல்முனை பிரதேச செயலக கலாசார பேரவை ஏற்பாடு செய்திருந்த விஷேட கலாசார விழா இன்று சனிக்கிழமை காலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கலாசார உத்தியோகத்தர் திருமதி வ.பற்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவ்விழாவில் ஊடகம், இலக்கியம், சமூக சேவை, விளையாட்டு, மருத்துவம் ஆகிய துறைகளில் பங்களிப்பு செய்த 12 பேர் சிறப்பு அதிதிகளாக அழைக்கப்பட்டு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். *யூ.எம்.அதீக் சோலைக்கிளி (இலக்கியம்) *எம்.எம்.ஏ.காதர் (இலக்கியம்) *எம்.எச்.எம்.முஹைதீன் (சமூக சேவை) *ஏ.எல்.இப்ராஹீம் (மருத்துவம்) *எம்.ஐ.எம்.முஸ்தபா (விளையாட்டு) *எம்.பி.அபுல் ஹசன் (இலக்கியம்) *ஏ.எம்.பி.எம்.ஹுசைன் (சமூக சேவை) *பி.எம்.எம்.ஏ.காதர் (ஊடகம்) *ஏ.ஆர்.நிஹ்மத்துல்லா  (இலக்கியம்) *யூ.எம்.இஸ்ஹாக் (ஊடகம்) *எஸ்.எல்.ஏ.அசீஸ் (ஊடகம்) *ஏ.எல்.ஏ.நாசர் (சமூக சேவை) ஆகியோரே பாராட்டி கௌரவிக்கப்பட்ட பிரமுகர்களாவர். இதன்போது ‘முனைமலர்’ எனும் சிறப்பு மலரும் வெளியிட்டு வ