இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்!


இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் நாளை 22ம் திகதி வியாழனன்று சீனாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.

இந்த செயற்கைக் கோள் சீனாவின் சீசாங் ஏவுதளத்திலிருந்து நாளை பிற்பகல் 3.30 மணியளவில் விண்ணில் ஏவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்- அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னர் வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோளை கட்டுப்படுத்துவதற்கான நிலையம் கண்டியிலுள்ள பல்லேகலவில் அமைக்கப்படவுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டதும்- உலகில் சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வைத்திருக்கும் 45வது நாடாக இலங்கை வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளது.

தெற்காசியாவில் இந்தியா- பாகிஸ்தானுக்கு அடுத்ததாக- சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை கொண்டுள்ள மூன்றாவது நாடு என்ற பெருமையையும் இலங்கை பெறும்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது