கல்முனை வர்த்தகர் மின்சாரம் தாக்கி மரணம்

கல்முனை வர்த்தகர் மின்சாரம் தாக்கி மரணமான  சம்பவம் இன்று கல்முனையில் இடம் பெற்றுள்ளது .சம்பவத்தில் மரணமானவர் நட்பிட்டிமுனையை சேர்ந்த 62  வயதுடைய முகம்மது இஸ்மாயில் முகம்மது ஹனிபா என்பவராகும் .
கல்முனையில் தெருவோர  புடவை வியாபாரம் செய்யும்  நபரான இவர் சம்பவம் நடை பெற்ற இன்று வர்த்தகத்தை முடித்து விட்டு புடவை பொதியை வாடகை அறையில் வைக்க சென்ற போதே இந்த விபரீதம் ஏற்ப்பட்டு மரணமாகி உள்ளார் .
சம்பவம் தொடர்பாக கல்முனை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .கல்முனை நீதிவான் நீதிபதியின் உத்தரவுக்கமைய சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது 

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!