செல்வாக்கு சரிந்து வரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்



By: M.I.M.S. Anwar


இலங்கையில் கடந்த காலங்களில் அதாவது 1983ம் ஆண்டில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் பின்னர் அரச-தமிழ் தரப்பினர்களுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சு வார்த்தைகளில் இந்நாட்டு முஸ்லிம்களைப் பிரதிநிதிப்படுத்தவோ அல்லது அவர்களின் குறை நிறைகளை அவ்வாறான பேச்சு வார்த்தைகளில் முன் வைக்கவோ அவர்களுக்கென ஒரு கட்சி இல்லாதபோதுதான் ஒரு முஸ்லிம் கட்சியின் அவசியம் உணரப் பட்டது. இதைத் தொடர்ந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருப்பெற்று இங்குள்ள முஸ்லிம்கள் மத்தியில் அதிக செல்வாக்கையும் பெற்றது.
“பிழையான வழியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செல்லுமாயின் என்னையும் அழித்து எனது கட்சியையும் அழித்துவிடு இறைவா” என்று கட்சியின் மறைந்த தலைவர் மர்ஹ_ம் அ~;ரப் அவர்கள் கூறியதை தலைவரின் பாசறையில் வளர்ந்ததாகக் கூறிக் கொண்டீருக்கும் ஒருவரிடம் சொன்ன போது அவர் நான் தெரிவித்த அக்கூற்றுக்கு ஒரு சிறு மாற்றம் செய்து “எங்களையும் அழித்து இக்கட்சியையும் அழித்து விடு இறைவா” என்றுதான் தலைவர் கூறியதாகத் தெரிவித்தார்.
எது எவ்வாறிருப்பினும் இக்கட்சியின் ஸ்தாபகர் மர்ஹ_ம் ஆ.ர்.ஆ. அ~;ரப் அவர்கள் மரித்ததன் பின்னர் இக்கட்சி அழிவுப் பயணத்தை நோக்கிய பாதையில் நகர்ந்து கொண்டிருப்பதை அனைவராலும் உணரக் கூடியதாகவே உள்ளது. முஸ்லிம்களின் ஒரேயொரு தனித்துவக் கட்சியாகவிருந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அ~;ரப் மறைந்த சூட்டுடனேயே றஊப் ஹக்கீம் அவர்கள் தலைவராக நியமிக்கப் பட்டார். இதனால் பேரியல் அ~;ரப் அவரது கணவர் மர்ஹ_ம் அ~;ரபினால் உருவாக்கப் பட்ட மற்றைய கட்சியான தேசிய ஐக்கிய முன்னணியைப் யேவழையெட ருnவைநன யுடடயைnஉந (Nருயு) பொறுப்பேற்று அதற்குத் தலைவியானார். கட்சியும் இரண்டாகப் பிளவு பட்டது.
றஊப் ஹக்கீம் தலைவரானதைத் தொடர்ந்துää இக்கட்சி அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையில் தேசிய முஸ்லிம் காங்கிரஸ் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் அகில இலங்கை முஸ்லிம் மக்கள் காங்கிரஸ் என்றும் மேலும் இரண்டாகப் பிளவுபட்டது. இக்கட்சிகள் இரண்டும் றஊப் ஹக்கீமிற்கும் அவரது கட்சிக்கும் எதிராகவே இன்றும் செயற்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் அதாவுல்லாää றிசாத் பதியுதீன் ஆகிய இருவருக்கும் றஊப் ஹக்கீமிற்கும் இடையிலான முரண்பாடும் அதிதிருப்தியும்தான் எனக் கூறப்படுகிறது.
தலைவர் றஊப் ஹக்கீமின் தன்னிச்சையான போக்கும்ää நடவடிக்கையும் நான்காகப் பிளவுபட்டிருக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை மீண்டும் ஓரு பிளவிற்கு இட்டுச் செல்லக்கூடும் என எதிர்வு கூறப்படுகி;றது. றஊப் ஹக்கீம் கட்சியின் தலைமைப்பீட (Pயசவல ர்iபா ஊழஅஅயனெ) அங்கத்துவத்தை அதிகரித்திருப்பதும் அதற்கேற்றாற்போல் கட்சிப் பதவிகளில் தனது கையாட்களை அமர்த்தியிருப்பதும் இதற்கு ஒரு சான்றாகவே தெரிவிக்கப்படுகிறது.  
சலுகை தேவையில்லை உரிமைதான் தேவையென்றும் அபிவிருத்தி அரசின் கடமை என்றும் கோசமிட்ட இக்கட்சியின் தலைவர்கள் இவற்றையெல்லாம் மறந்து இன்று சலுகைக்காகவும் பதவிக்காகவும் அரசிடம் மண்டியிடுவதும் சரணாகதி அரசியல் நடாத்துவதும் வாக்காளர்கள் மத்தியில் அதிகளவிலான அதிதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதைப் காணக்கூடியதாக உள்ளது.
மேலும் உரிமைகளுக்காகப் போராடவும்ää கட்சியின் பேரம் பேசும் சக்தியை அதிகரிப்பதற்காகவும் தேர்தல்களின்போது அதிகளவில் இக்கட்சிக்கு வாக்களித்த மக்கள்ää முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை அரசுடனோ அல்லது எதிர்க்கட்சியுடனோ அல்லது தமிழ்த் தரப்பினருடனோ நடத்திய பேச்சுக்களின்போது என்ன பேசப் பட்டதென்றோ அல்லது அதன் பெறுபேறுகள் என்னவென்றோ இன்றும் அறியாதுளர் என்றே கூறவேண்டும். இவர்கள் அறிந்ததெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடனான பேச்சுக்களின் பின்னர் கட்சித் தலைவர் ஹக்கீமிற்கு ஒரு அமைச்சுப் பதவியும்ää தவிசாளர் ப~Pரிற்கு ஒரு பிரதி அமைச்சர் பதவியும் கிடைக்கப் பெற்றதையே.
கிழக்கு மாகாண சபை அண்மைத் தேர்தலின் பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் தமிழ்க் தரப்பினர் முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவியை தாரைவார்க்க முன் வந்தபோதும் அதை ஏற்காது அரசுடன் கூட்டுச் சேர்ந்தமை வாக்களித்த மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோடல்லாமல் தலைமைத்துவத்தின் மேல் வெறுப்பையும் சேர்த்துள்ளது. இக் கைங்கரியத்தைச் செய்த முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் கலைக்கப்படவுள்ள மத்திய அரசின் அமைச்சரவையில் இரண்டு அமைச்சர் பதவிகளையும் மூன்று பிரதி அமைச்சர் பதவிகளையும் எதிர்பார்த்திருப்பதாகச் சொல்லப்படுவது கட்சியினரின் சீற்றத்திற்கும் களங்கத்திற்கும் வழி வகுத்துள்ளதையே கோடிட்டுக் காட்டுகிறது.



Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்