ஜனாதிபதி ஊடகப் பேச்சாளராக மொஹான் சமரநாயக்க!
ஜனாதிபதி ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட ஊடகவியலாளரான மொஹான் சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக மொஹான் சமரநாயக்க கடமையாற்றும் இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதார சிறப்புப் பட்டம் பெற்றுள்ளார்.
இவர் இலங்க ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக பதவிவகுக்கும் அதேவேளை- ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளராகவும் மொஹான் சமரநாயக்கா கடமையாற்றுவார்.
ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளராக இதுவரை காலமும் கடமையாற்றிய பந்துல ஜயசேகர அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர கொன்ஸியூலர் ஜெனரலாக நியமனம் பெற்று இன்று அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன்- ஜனாதிபதியின் சர்வதேச ஊடகப் பிரிவின் பணிப்பாளராக அனுராதா ஹேரத் நியமனம் பெற்றுள்ளார்
Comments
Post a Comment