நற்பிட்டிமுனையில் மாடுகள் பல திடீர் இறப்பு
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனைக் கிராமத்திலுள்ள அஷ்ரப் விளையாட்டு மைதானத்துக் கருகில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் இன்று காலை திடீரென இறந்துள்ளன.
பல மாடுகள் இவ்வாறு மர்மமான முறையில் திடீரென இறந்தமையானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் பொலிசாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விசாரணைகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த இடத்தில் உணவில் நச்சுத் தன்மை இருந்திருக்கலாம் எனவும் அவற்றை உட்கொண்ட மாடுகளே உயிரிழந்திருக்கலாம் எனவும் மாநகர சபை வைத்திய அதிகாரி டாக்டர் சுல்பி தெரிவித்தார்.
Comments
Post a Comment