கல்முனை மஹ்மூத் பெண்கள் கல்லூரிக்கு புதிய அதிபராக யு.எல்.அப்துல் முபாரக்நியமனம்
கல்முனை நகரில் பிரபல்யமான பெண்கள் பாடசாலையான கல்முனை மஹ்மூத் பெண்கள் கல்லூ ரிக்கு பொருத்தமான அதிபர் ஒருவரை விண்ணப்பம் கோரி நேர்முகப்பரீட்சையின் மூலம் தெரிவு செய்து நியமனம் செய்யுமாறு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைவாக கடந்த 01.11.2012இல் கிழக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டு, காணி, காணி அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சில் நேர்முகப்பரீட்சையொன்று நடை பெற்றது.
இதில் இப்பிரதேச அதிபர்களும் கல்வி அதிகாரி ஒருவரும் கலந்து கொண்டனர். இந்த நேர்முகப் பரீட்சைக்கு மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் தற்போது அதிபராக கடமையாற்றும் இலங்கை அதிபர்கள் சேவை தரம் -1 யைச் சேர்ந்த அல்ஹாஜ் யு.எல்.அப்துல் முபாரக் என்பவர்தெரிவு செய்யப்பட்டு கல்முனை மஹ்மூத் பெண்கள் கல்லூரிக்கு புதிய அதிபராக மாகாணக் கல்வி அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கல்முனை மஹ்மூத் பெண்கள் கல்லூரிக்கு நிரந்தர அதிபர் ஒருவர் இல்லையென்ற குறை தீர்க்கப்பட்டுள்ளது. ஆயினும் அல்ஹாஜ் யு.எல்.அப்துல் முபாரக் அவர்கள் தற்போது கடமையாற்றும் மட் காத்தான்குடி மத்திய கல்லூரியின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழுவினர் மற்றும் பழைய மாணவசங்கத்தினர் மேற்படி அல்ஹாஜ் யு.எல்.அப்துல் முபாரக் அவர்களை தொடர்ந்தும் இக்கல்லூ ரியில் கடமையாற்றுமாறு வலியுறுத்தி உள்ளனர்.
Comments
Post a Comment