கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசலில்ஜனாதிபதியின்இரண்டாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டுதுஆ பிரார்த்தனை
ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் இரண்டாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை மற்றும் விசேட சொற்பொழிவும்; நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புக்களின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசலின் பேஷ் இமாம் மௌலவி ஏ.சமது துஆ பிரார்த்தனையை நடத்தினார்.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் கல்முனைத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளரும், மாநகரசபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ், மாநகரசபை உறுப்பினர் ஏ.பறக்கதுல்லா உட்பட சமூக அமைப்புக்களின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். இதே வேளை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியிலும் ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் இரண்டாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
Comments
Post a Comment