27ஆம் திகதியே ஹஜ் பெருநாள்

இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் இன்று செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தது.

ஹிஜ்ரி 1433 புனித துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை இன்று செவ்வாய்க்கிழமை இரவு நாட்டின் எந்தவொரு பாகத்திலும் தென்படவில்லை.  இதற்கமையவே 27ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்கள் பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

புனித துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஹமீதிய்யா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை பிரதிநிதிகள்இ கொழும்பு பள்ளிவாசல் நிர்வாக சபையின் பிரதிநிதிகள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள் மற்றும் ஷரீயா கவுன்ஸில் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புனித ஹஜ் பெருநாள் எதிர்வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என்று நாட்காட்டிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று