பிரின்ஸ் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டு​ப் போட்டி


நற்பிட்டிமுனை பிரின்ஸ் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று (30.09.2012) நற்பிட்டிமுனை அஷ்ரப் ஞபகார்த்த விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் முஹமட் றியாஸ் தலைமையில் நடைபெற்றது.
ஒலிம்பிக் தீபமேற்றி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் 25மீற்றர் ஓட்டம்,முயல் ஓட்டம், தவளை ஓட்டம், தாறா ஓட்டம், சமநிலை ஓட்டம், போத்தலில் தன்னீர் நிரப்புதல்,கரன்டியில் தேசிக்காய் ஏந்திய ஓட்டம் போன்ற பல்வேறுபட்ட போட்டிநிகழ்ச்சிகள் இடம் பெற்றன.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கௌரவ அதிதியாக முன்னாள் அட்டாலைச்சேனை பிரதேச சபை தவிசாளரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.நசீர், அதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார், பெற்றோர் மற்றும் பிரேதேசவாசிகள் கலந்து சிறப்பித்தனர்.


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்