வடக்கு ,கிழக்கு மக்களுக்கு ஒரு மணி நேரத்துக்குள் பிறப்பு ,இறப்பு சான்றிதழ்கள்!


வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சகல பிரதேச செயலகங்களில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை ஒரு மணித்தியாலத்திற்குள் வழங்கும் நாடளாவிய வேலைத் திட்டம் 2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என பொது நிருவாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டப்ளியு. டீ. ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகங்களின் தரவுகளை கணனிமயப்படுத்தும் வலையமைப்பு வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
வட மாகாணத்தில் கணனி வலையமைப்புக்கு உட்படுத்தும் பணி பூர்த்தியடைந்துள்ளதாகவும், அதன்படி தற்போது நாடளாவிய ரீதியில் 250 இற்கும் மேற்பட்ட பிரதேச செயலகங்களில் இப்பணி பூர்த்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கொழும்பு ,களுத்தறை போன்ற மாவட்டங்களில் ஐந்து நிமிடங்களிலேயே பிறப்பு இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டம் ஓரிரு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டன .
இம்மாவட்டத்தில் சகல பிரதேச செயலகங்களிலும் இப்பணி பூர்த்தியடைந்துள்ளமை அரசாங்கத்திற்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும் எனவும் அமைச்சர் டப். ஜே. செனவிரத்ன மேலும் கூறினார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்